Asianet News TamilAsianet News Tamil

Banana Halwa : வாழைப்பழம் இருக்கா..? அப்ப  'அல்வா' செய்யலாம் வாங்க.. ரெசிபி இதோ!!

வாழைப்பழத்தில் சுவையான அல்வா எப்படி செய்வது என்று இங்கு பார்க்கலாம்..

how to make banana halwa at home in tamil mks
Author
First Published Mar 1, 2024, 1:16 PM IST

வாழைப்பழம் உடலுக்கு பலவிதமான நன்மைகளை தருகிறது. ஏனெனில், அதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. மேலும் அவை ஆற்றலின் களஞ்சியமாகும். எனவே, நாம் தினமும் வாழைப்பழங்களை சாப்பிட வேண்டும். ஒருவேளை உங்களுக்கு வாழைப்பழம் சாப்பிட பிடிக்கவில்லை என்றால், வாழைப்பழம் அல்வா செய்து சாப்பிடுங்கள். ஆம்.. நீங்கள் கேட்டது சரிதான். 

பொதுவாகவே, கேரட் அல்வா பீட்ரூட் அல்வா போன்றவற்றை தான்  வீடுகளில் செய்வார்கள். ஆனால் வாழைப்பழ அல்வாவை ருசித்தவர்கள் வெகு சிலரே. நீங்கள் இனிப்புகளை சாப்பிட விரும்புபவர்கள் என்றால் வாழைப்பழத்தில் இருந்து செய்யப்படும் அல்வாவை கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள். 

வாழைப்பழம் ஆற்றல் இல்லம் என்று அழைக்கப்படுகிறது.. எனவே, வாழைப்பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் அல்வா அதன் குணங்களில் குறையாது. நீங்கள் பல உணவில் சில புதிய சமையல் குறிப்புகளை முயற்சிக்க விரும்பினால் கண்டிப்பாக வாழைப்பழ அல்வாவை செய்து சாப்பிடுங்கள். இது செய்வது மிகவும் கடினமல்ல. எனவே, வாழைப்பழம் அல்வா செய்யும் முறையை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

இதையும் படிங்க:  வாழைக்காய் வைத்து பஜ்ஜியே செய்யாதீங்க! இப்படி கோலா உருண்டை செஞ்சு கொடுங்க! 10 சாப்பிட்டாலும் பத்தல என்பார்கள்

how to make banana halwa at home in tamil mks

வாழைப்பழ அல்வா செய்ய தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் - 5
சர்க்கரை - 1/4 கப் 
நெய் - 1/2 கப்
ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்
தண்ணீர் - 1/4 கப் 
முந்திரி, உலர் திராட்சை - தேவையான அளவு

இதையும் படிங்க:  அடிக்கும் வெயிலுக்கு சில்லென்று “வாழைப்பழ ஸ்மூத்தி” செய்து சாப்பிடலாம் வாங்க!

how to make banana halwa at home in tamil mks

வாழைப்பழ அல்வா செய்முறை:

  • வாழைப்பழம் அல்வா செய்ய முதலில் வாழைப்பழத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். 
  • இப்போது அந்த துண்டுகளை மசிக்கவும் அல்லது மிக்ஸி ஜாரில் அரைக்கவும். அதே நேரத்தில், கேஸில் ஒரு கடாயை வைத்து அதில் நெய் சேர்த்து சூடாக்கவும். நெய் சூடானதும் அதில் முந்திரி உலர் திராட்சையை வறுத்தெடுத்துக் கொள்ளுங்கள்.
  • பின்னர் அதே பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்க்க வேண்டும். சர்க்கரை பாகு நிலைக்கு வந்தவுடன் அதனுடன் அதில் அரைத்து வைத்த வாழைப்பழத்தை சேர்க்க வேண்டும். இதனுடன் சிறிதளவு நெய்யும் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இவற்றை நன்கு வதக்கி கொண்டே இருக்கவும். வாழைப்பழம் நன்கு வெந்தவுடன் நிறம் மாறும். கடைசியாக ஏலக்காய் தூள் வருத்த முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து கிளரவும். அவ்வளவுதான் இப்போது சுவையான வாழைப்பழ அல்வா ரெடி..!!!

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Follow Us:
Download App:
  • android
  • ios