MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கோடி கோடியாய் கொட்டும் துட்டு... ரஜினி, விஜய்யை பின்னுக்கு தள்ளி கோலிவுட்டின் பணக்கார நடிகரானது யார் தெரியுமா?

கோடி கோடியாய் கொட்டும் துட்டு... ரஜினி, விஜய்யை பின்னுக்கு தள்ளி கோலிவுட்டின் பணக்கார நடிகரானது யார் தெரியுமா?

கோலிவுட்டில் அதிக சொத்து மதிப்பு கொண்ட நடிகர்களின் பட்டியலில் விஜய், ரஜினியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்திருக்கிறார் பிரபல நடிகர்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 05 2024, 01:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Richest Kollywood Actor

Richest Kollywood Actor

கொரோனாவுக்கு பின் கோலிவுட் நடிகர்களின் சம்பளம் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. அதற்கு முன்னர்வரை ரூ.100 கோடிக்கு கீழ் சம்பளம் வாங்கி வந்த விஜய், அஜித், ரஜினி, கமல் போன்ற நடிகர்கள், தற்போது 200 கோடியை நோக்கி நகர்ந்து வருகின்றனர். இதனால் இவர்களின் சொத்து மதிப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் கோலிவுட்டில் அதிக சொத்துக்களை கொண்ட பணக்கார நடிகர் யார் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

25
அஜித்குமார் (Ajith)

அஜித்குமார் (Ajith)

கோலிவுட்டில் மாஸ் நடிகராக வலம் வரும் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர அடுத்த படத்திற்காக தெலுங்கு தயாரிப்பாளரிடம் பெரும் தொகையை சம்பளமாக வாங்கி இருக்கும் அஜித்துக்கு சுமார் ரூ.350 கோடி சொத்துக்கள் உள்ளதாம். துணிவு படத்துக்காக ரூ.70 கோடி சம்பளமாக வாங்கிய அஜித், விடாமுயற்சிக்கு ரூ.100 கோடிக்கு மேல் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதிக சொத்து மதிப்பு கொண்ட நடிகர் பட்டியலில் அஜித் 4ம் இடத்தில் உள்ளார்.

35
ரஜினிகாந்த் (Rajinikanth)

ரஜினிகாந்த் (Rajinikanth)

அஜித்துக்கு அடுத்தபடியாக ரூ.430 கோடி சொத்துக்களுடன் ரஜினி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். இவர் கடைசியாக நடித்த ஜெயிலர் படத்திற்காக ரூ.110 கோடி சம்பளம் ரூ.100 கோடி ஷேர் என மொத்தம் ரூ.210 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது. இவர் கைவசம் தற்போது லால் சலாம், வேட்டையன், தலைவர் 171, ஜெயிலர் 2 போன்ற படங்கள் வரிசைகட்டி காத்திருக்கின்றன.

இதையும் படியுங்கள்... ஈசிஆரில் பண்ணை வீடு... தினந்தோறும் சக நடிகைகளுடன் உல்லாசம்! வடிவேலு ஒரு காமக்கொடூரன்... பகீர் கிளப்பிய பிரபலம்

45
விஜய் (Thalapathy vijay)

விஜய் (Thalapathy vijay)

சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த விஜய் தற்போது அரசியலில் குதித்துள்ளார். இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என விஜய் அறிவித்திருந்தாலும் தற்போதைய நிலவரப்படி அதிகப்படியான சொத்துக்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ள நடிகர் இவர் தான். இவர் ரூ.445 கோடி சொத்துக்களுக்கு அதிபதியாக இருக்கிறார். இவர் கைவசம் தற்போது கோட் படம் உள்ளது. இப்படத்திற்காக விஜய் ரூ.120 கோடி சம்பளம் வாங்கி உள்ளாராம்.

55
கமல்ஹாசன் (Kamal haasan)

கமல்ஹாசன் (Kamal haasan)

கடந்த 2 ஆண்டுகளில் கோலிவுட்டில் அசுர வளர்ச்சி கண்ட நடிகர் என்றால் கமல்ஹாசன் தான். விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின்னர் கமலின் மார்க்கெட் பன்மடங்கு எகிறியதோடு பட வாய்ப்புகளும் குவிந்தன. இவர் கைவசம் தற்போது இந்தியன் 2 மற்றும் 3ம் பாகம், தக் லைப், பிரபாஸின் கல்கி, அன்பறிவு இயக்கும் படம் என அரை டஜன் படங்கள் உள்ளன. இதனால் ஒரு படத்துக்கு ரூ.150 கோடி சம்பளமாக வாங்கி வரும் கமலின் சொத்து மதிப்பு ரூ.450 கோடியாம். இவர் தான் தற்போது கோலிவுட்டின் பணக்கார நடிகராக திகழ்ந்து வருகிறார்.

இதையும் படியுங்கள்... கொடுமைக்கார அப்பா.. கண்முன்னே நெருப்பில் கருகி உயிரிழந்த அம்மா! நாஞ்சில் விஜயன் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கமல்ஹாசன்
ரஜினிகாந்த்
விஜய் (நடிகர்)
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved