தனித்தீவில் நித்தி மட்டுமா..? ஹாலிவுட் நடிகையும் உல்லாச வாழ்கை..!

First Published 7, Dec 2019, 2:58 PM

தென் அமெரிக்க நாடான் ஈகுவெடார் அருகே சொந்தமாக தனித்தீவை வாங்கி, அதனை தனிநாடாக அறிவித்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார் நித்தியானந்தா. கைலாசா என்று பெயரிடப்பட்டுள்ள அந்த நாட்டிற்கென தனி இணையதளத்தை உருவாக்கியுள்ள அவர், கைலாசா குறித்து முழு விவரங்களையும் அதில் வெளியிட்டுள்ளார். உள்ளூர் முதல் தேசிய ஊடகங்கள் வரை கைலாசா குறித்து தான் செய்திகள் வலம் வந்த வண்னம் உள்ளன. இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக உள்ள நித்தியானந்தா தனித்தீவை வாங்கியது வேண்டுமென்றால் நமக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால் உலகின் பெரும் பணக்காரர்கள், ஹாலிவுட் பிரபலங்கள், பாப் பாடகர்கள் என பலர் ஏற்கனவே தங்களுக்கென்று ஒரு தனித்தீவை சொந்தமாக கொண்டுள்ளனர்.

டைட்டானிக் ஹீரோவான் லியனார்டோ டிகாப்ரியோ 2005 ஆண்டு பிளாகடோர் காயே என்ற தீவை விலைக்கு வாங்கினார். கரீபியன் கடல் பகுதியில், பெலீஸ் என்ற பகுதியில் அமைந்துள்ள சிறிய தீவின் அன்றைய மதிப்பு 1.75 மில்லியன் டாலர்

கனடா நாட்டின் பாடகி செலின் டியான், அந்நாட்டின் க்யூபெக் மாகாணத்தில் ஐல் கேக்னான் என்ற தீவை சொந்தமாக வாங்கியுள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகரான் ஜான் டெப், பஹாமஸ் என்ற நாட்டில் லிட்டில் ஹால்ஸ் பாண்ட் கிளே என்ற தீவை கடந்த 2004-ம் ஆண்டு வாங்கினார். இந்த தீவின் விலை அன்றைய மதிப்பு 3.6 மில்லியன் டாலர்

பிரபல ஹாலிவுட் நடிகரும், இயக்குனருமான மெல் ஜிப்சன், பசுபிக் கடல் பகுதிகளில் உள்ள ஃபிஜியில் மேகோ என்ற தீவை 2004-ம் ஆண்டு வாங்கினார். 15 மில்லியன் டாலருக்கு இவர் அந்த தீவை வாங்கியுள்ளார்.

ஃபார்முலா ஒன் பந்தயத்தின் ஓய்வுபெற்ற வீரரான மைக்கேல் ஷுமாக்கருக்கு 7 மில்லியன் டாலர் மதிப்புள்ள தீவு ஷைக் முகமது என்பவரால் பரிசாக வழங்கப்பட்டது.

பிரபல் ஹாலிவுட் நடிகரும், இயக்குனருமான நிகோலஸ் கேஜ், 2006-ம் ஆண்டு பஹாமஸ் உள்ள தீவை 3 மில்லியன் டாலருக்கு வாங்கினார்.

பிரபல பாப் பாடகரான ரிக்கி மார்டின், 2008-ம் ஆண்டு பிரேசில் உள்ள ஒரு தீவை 8 மில்லியன் டாலருக்கு வாங்கினார்.

பிரபல ஹாலிவுட் காமெடி நடிகரான ராபின் வில்லியம்ஸ், கனடா நாட்டில் பெண்டர் ஹார்பர் என்ற துறைமுகத்தை வாங்கினார்.

பிரபல பாப் பாடகியான ஷகிரா, பஹாமஸ் நாட்டில் பாண்ட்ஸ் கே என்ற தீவை விலைக்கு வாங்கினார். அவருடைய தீவின் மதிப்பு 16 மில்லியன் டாலராகும்.

பாடகர், காமெடியன், நடிகர் என பலப் பரிமாணங்களை கொண்ட எடி மர்பி, பஹாமஸில் உள்ள ரூஸ்டெர் கே என்ற தீவை 2007-ம் ஆண்டு வாங்கினார். அதன் அன்றைய மதிப்பு 15 மில்லியன் டாலர்

பிரபல அமெரிக்க மெஜிசியனான டேவிட் காப்பர்ஃபீல்ட், பஹாமஸில் 4 தீவுகளை வாங்கியுள்ளார். அதன் மதிப்பு 50 மில்லியன் டாலர்

பிரபல அமெரிக்க பாடகியான பியோன்சே, ஃப்ளோரிடாவில் உள்ள 12.6 ஏக்கர் பரப்பளவுள்ள ஒரு தீவை, தனது 29வது பிறந்தநாளுக்காக வாங்கினார்.

பிரபல ஹாலிவுட் நடிகையான ஜூலியா ராபர்ட்ஸ், பஹாமஸ் நாட்டில் உள்ள ஜார்ஜியா கடல்பகுதியில் ஒரு தீவை விலைக்கு வாங்கியுள்ளார்.