Srithika 2nd Marriage: திருமணமான 4 வருடத்தில் டைவர்ஸ்! சன் டிவி சீரியல் ஹீரோவுடன் ஸ்ரித்திகா 2-வது திருமணம்!
நாதஸ்வரம் சீரியல் ஹீரோயின் ஸ்ரித்திகா, தன்னுடன் நடித்த சீரியல் ஹீரோவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குறிப்பிட்ட சீரியல்களை எத்தனை வருடங்கள் ஆனாலும் ரசிகர்கள் மறப்பதில்லை. அப்படி ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத சீரியலாக, நீக்காத இடத்தை பிடித்த தொடர் தான், 'நாதஸ்வரம்'.
திருமுருகன் இயக்கி நடித்திருந்த இந்த தொடர், 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பானது. அழகிய குடும்ப பின்னணியில் 5 தங்கைகளை ஒரே ஆண்மகனாக இருந்து காப்பாற்றும் தாயுள்ளம் கொண்ட அண்ணனை பற்றிய கதைக்களத்தில் இந்த சீரியல் ஒளிபரப்பானது. இந்த சீரியலில் திருமுருகனுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் ஸ்ரித்திகா.
இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்னர், வெண்ணிலா கபடி குழு, மகேஷ் சரண்யா மற்றும் பலர், வேங்கை, போன்ற படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்திருந்தாலும் இந்த தொடர் அவருக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.
2007 ஆம் ஆண்டு முகூர்த்தம் எனும் சீரியல் மூலம் அறிமுகமான ஸ்ரித்திகா, இதைத்தொடர்ந்து கலசம், கோகுலத்தில் சீதை, மகராசி போன்ற 10-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். ஆனால் இவருடைய கேரியரில் மறக்க முடியாத சீரியலாக உள்ளது நாதஸ்வரம் சீரியல் தான்.
இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு, சனீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில்... கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று விட்டதாக தற்போது அறிவித்துள்ள ஸ்ரித்திகா, மகராசி சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த ஆரியன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து ஸ்ரித்திகா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, "சில வருடங்களுக்கு முன்பு நானும், ஆர்யனும் எண்களின் திருமண வாழ்க்கையிலிருந்து விவாகரத்து பெற்று பிரிந்தோம். இதற்கு நாங்கள் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. இப்போது எங்களுடைய கடந்த வாழ்க்கை பற்றிய எந்த ஒரு எதிர்மறையான விஷயங்களையும் இங்கு பகிர்ந்து கொள்ள நாங்கள் விரும்பவில்லை. நட்பும் புரிதலும் எங்களுடைய அடுத்தக்கட்ட நகர்விற்கான நம்பிக்கையை கொடுத்துள்ளது. உங்களுடைய சப்போர்ட்டினாலும் எங்களுடைய பெற்றோர்களின் ஆசியாலும் நாங்கள் இருவரும் பதிவு திருமணம் செய்திருக்கிறோம். தொடர்ந்து உங்களுடைய அன்பையும், ஆதரவையும் எங்களுக்குக் கொடுங்கள். சீக்கிரம் இது தொடர்பான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்கிறோம் என தெரிவித்துள்ளார்.
தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் சனீஷ் என்னும் தன்னுடைய முன்னாள் கணவரின் பெயர் நீக்கப்படாமல் இருப்பதற்கு, டெக்னிக்கல் பிரச்சனை தான் காரணம். விரைவில் அதை சரி செய்து விடுவோம் என விளக்கம் ஒன்றையும் ஸ்ரித்திகா கூறியுள்ளார்.
எஸ்.எஸ்.ஆரியன் முதல் மனைவி நிவேதித்தாவிடம் இருந்து கடந்த 4 வருடங்களுக்கு முன்பே விவாகரத்து பெற்ற நிலையில், 'திருமகள்' சீரியல் ஹீரோ சுரேந்தரை கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.