- Home
- Gallery
- ஆல்யா மானசா - சஞ்சீவ் வாங்கிய தனி வில்லாவின் House Warming நிகழ்ச்சி! வாழ்த்த குவிந்த பிரபலங்களின் போட்டோஸ்!
ஆல்யா மானசா - சஞ்சீவ் வாங்கிய தனி வில்லாவின் House Warming நிகழ்ச்சி! வாழ்த்த குவிந்த பிரபலங்களின் போட்டோஸ்!
பல கோடி செலவில், ஆல்யா மானசா மற்றும் சன்ஜீவ் ஜோடி கட்டியுள்ள வில்லாவின் கிரஹப்ரவேச நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். இதுகுறித்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மானாட மயிலாட' நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தி பிரபலமானவர் ஆல்யா மானசா. இதன் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து, சீரியல் வாய்ப்பு தேடியவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான, 'ராஜா ராணி' சீரியலில் செம்பா என்றும் கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து சின்னத்திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்து வந்த சஞ்சீவை காதலிக்க துவங்கிய ஆல்யா... திடீர் என திருமணம் செய்து கொண்டு அதிற்சிகொடுத்தார். திருமணத்திற்கு முன்பே ஆல்யா கர்ப்பமானது தான் இவர்களின் திருமணத்திற்கு காரணம் என கூறப்பட்டது.
தற்போது சின்னத்திரையே பொறாமை கொள்ளும் வகையில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்துகொண்டுள்ளனர். சின்னத்திரை சீரியல் நடிகைகள் சிலர்... பிசியாக நடித்து வரும் போது, முதல் குழந்தை பிறந்தாலும் இரண்டாவது குழந்தை பெற்று கொள்வதை தள்ளி போடுவார்கள். ஆனால் ஆல்யா சஞ்சீவ் ஜோடி இரண்டே வருடத்தில் ஆண் குழந்தையை பெற்றுக்கொண்டனர்.
குழந்தை பிறந்த 6 மாதத்திலேயே மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'இனியா' தொடரில் நடிக்க துவங்கினார் ஆல்யா. சஞ்சீவும் சன் டிவியின் சூப்பர் ஹிட் தொடரான கயல் சீரியலில் நடித்து வருகிறார். ஏற்கனவே இவர்கள் அப்பார்ட்மெண்ட்டில் பிளாட் மற்றும் சென்னையில் தனியாக வீடு ஒன்றை சொந்தமாக வைத்துள்ள நிலையில், வில்லா ஒன்றை கட்ட வேண்டும் என்பது தங்களின் கனவு என கூறினர்.
இந்த கனவை நிறைவேற்றும் விதமாக தற்போது ஆல்யா - சஞ்சீவ் ஜோடிக்கு தங்களின் கனவு வில்லனை கட்டி முடித்து அதற்க்கு கிரஹப்ரவேசமும் செய்துள்ளனர். இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். இந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.