MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சூப்பர்ஸ்டார் கையில் இருக்கும் இந்த குழந்தை... இன்று கோலிவுட்டின் ராக்ஸ்டாராக இருக்கிறார் - யார்னு தெரியுதா?

சூப்பர்ஸ்டார் கையில் இருக்கும் இந்த குழந்தை... இன்று கோலிவுட்டின் ராக்ஸ்டாராக இருக்கிறார் - யார்னு தெரியுதா?

தமிழ் திரையுலகில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் இன்று கோலிவுட்டின் நம்பர் 1 இசையமைப்பாளராக வலம் வரும் பிரபலத்தின் குழந்தை பருவ புகைப்படம் வைரலாகி வருகிறது.

2 Min read
Author : Ganesh A
| Updated : May 26 2024, 04:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
anirudh

anirudh

கொலவெறி என்கிற ஒரே பாடல் மூலம் உலகளவில் பேமஸ் ஆனவர் அனிருத். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்த 3 படத்துக்காக அவர் இசையமைத்த அப்பாடல் ஓவர் நைட்டில் சென்சேஷனல் ஹிட்டாகி யூடியூப்பில் பில்லியன் கணக்கில் வியூஸ்களையும் அள்ளியது. அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானதும் அப்படத்தின் மூலம் தான். அப்பாடல் மட்டுமின்றி 3 படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் வேறலெவல் ஹிட் அடித்தன. அப்படம் ஓரளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதற்கு அனிருத்தின் பாடல்கள் தான் காரணம்.

26
anirudh unseen photos

anirudh unseen photos

3 படத்திற்கு பின்னர் இவர் கோலிவுட்டில் திட்டதெல்லாம் ஹிட்டாக அமைந்தது. எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, கத்தி, வணக்கம் சென்னை, விக்ரம், மாஸ்டர், லியோ,  என இவரின் ஹிட் லிஸ்ட் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படம் மூலம் பாலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்தார் அனிருத். அப்படத்தின் பாடல்களும் ஹிட் ஆனதால், தற்போது பாலிவுட்டிலும் இவருக்கு மவுசு அதிகரித்து உள்ளது.

36
Music Director anirudh

Music Director anirudh

தற்போது தமிழில் அனிருத் கைவசம் அஜித்தின் விடாமுயற்சி, ரஜினியின் வேட்டையன் மற்றும் கூலி, கமல்ஹாசனின் இந்தியன் 2, சிவகார்த்திகேயனின் எஸ்.கே.23, சதீஷ் இயக்கத்தில் கவின் நடிக்கும் படம், நெல்சன் இயக்க உள்ள ஜெயிலர் 2, விக்னேஷ் சிவனின் எல்.ஐ.சி என லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது. இதுதவிர தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் தேவரா, அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம், இந்தியில் ஷாருக்கானின் அடுத்த படம் என பான் இந்தியா அளவில் செம்ம பிசியாக உள்ளார் அனிருத்.

இதையும் படியுங்கள்... அனிருத் ஸ்டைலை பாலோ பண்ணிய ஏ.ஆர்.ரகுமான்... வைரலாகும் வாட்டர் பாக்கெட் பாடல் மேக்கிங் வீடியோ

46
anirudh Rare photos

anirudh Rare photos

இவ்வளவு பிசியான இசையமைப்பாளராக உள்ள இவர் ஏராளமான சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார். அதன்படி சிம்பு உடன் இணைந்து அனிருத் உருவாக்கி பீப் சாங் பாடல் பெரும் சர்ச்சையாக வெடித்தது. அப்பாடலுக்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பின. இதுதவிர நடிகை ஆண்ட்ரியா உடன் காதல் சர்ச்சையிலும் சிக்கினார் அனிருத். அவர்கள் இருவரும் லிப்கிஸ் அடித்த புகைப்படங்களும் லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தின. பின்னர் ஆண்ட்ரியாவை பிரேக் அப் செய்து பிரிந்தார் அனிருத்.

56
Rajinikanth, anirudh

Rajinikanth, anirudh

அனிருத்தை விட ஆண்ட்ரியா 5 வயது மூத்தவர். இந்த வயது வித்தியாசம் காரணமாக தாங்கள் இருவரும் பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டதாக அனிருத்தே பேட்டியில் கூறி இருக்கிறார். இதுதவிர நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் அனிருத் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியானபோது அவர்கள் இருவரும் காதலிப்பதாக சர்ச்சை வெடித்தது. பின்னர் இருவருமே தாங்கள் நண்பர்கள் என விளக்கம் அளித்தனர். பின்னர் பாடகி ஜோனிடா காந்தியுடனும் காதல் கிசுகிசுவில் சிக்கினார் அனிருத்.

66
anirudh childhood photo

anirudh childhood photo

இப்படி பல்வேறு சர்ச்சைகளையும் கடந்து இன்று டாப் இசையமைப்பாளராக கோலோச்சி வரும் அனிருத், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் உறவினர் என்பது அனைவரும் அறிந்தது. அவர் குழந்தையாக இருக்கும் போது ரஜினிகாந்த், அனிருத்தை கையில் தூக்கி வைத்திருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த போட்டோவில் அனிருத் செம்ம க்யூட்டாகவும் இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... தேசிய விருது வென்ற இயக்குனருடன் கூட்டணி... சூர்யா டிராப் பண்ணிய படத்தை கையிலெடுக்கிறாரா சிவகார்த்திகேயன்?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அனிருத் ரவிச்சந்தர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved