தேசிய விருது வென்ற இயக்குனருடன் கூட்டணி... சூர்யா டிராப் பண்ணிய படத்தை கையிலெடுக்கிறாரா சிவகார்த்திகேயன்?
அமரன், எஸ்.கே.23 பட ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன், அடுத்ததாக தேசிய விருது வென்ற இயக்குனருடன் கூட்டணி அமைக்க உள்ளாராம்.
Sivakarthikeyan
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அவர் நடிப்பில் தற்போது அமரன் மற்றும் எஸ்.கே,23 ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதில் அமரன் திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி உள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரேமம் பட புகழ் சாய் பல்லவி நடிக்கிறார். மேலும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது.
SK 23
அமரன் திரைப்படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அமரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்.கே.23 திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மினி வஸந்த் நடிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... Amaran : ஷூட்டிங் ஓவர்... கமகமக்கும் பிரியாணி உடன் அமரன் படக்குழுவுக்கு கறி விருந்து வைத்த சிவகார்த்திகேயன்
Sivakarthikeyan Next Movie
இதுதவிர சிவகார்த்திகேயன் கைவசம் மேலும் இரண்டு படங்கள் உள்ளது. அதில் ஒரு படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளார். மற்றொரு படத்தை கோட் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார். இந்த இரண்டு படங்கள் தவிர்த்து தற்போது மேலும் ஒரு முன்னணி இயக்குனரிடம் கதை கேட்டு இருக்கிறாராம் எஸ்.கே. அந்த இயக்குனர் வேறுயாருமில்லை, சூரரைப் போற்று படத்துக்காக தேசிய விருது வென்ற சுதா கொங்கரா தான்.
Sudha Kongara
அவர் அண்மையில் நடிகர் சூர்யாவை வைத்து புறநானூறு என்கிற திரைப்படத்தை இயக்க கமிட்டாகி இருந்தார். பின்னர் அப்படத்தின் ஷூட்டிங்கை திடீரென தள்ளி வைத்தனர். அதில் இருந்து சூர்யா விலகியதாகவும் செய்திகள் உலா வந்தன. இந்த சமயத்தில் சிவகார்த்திகேயனிடம் சுதா கொங்கரா கதை சொல்லி உள்ளதால், அது சூர்யா கைவிட்ட புறநானூறு பட கதையாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் எது உண்மை என்பது விரைவில் தெரியவரும். பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... நிறைமாத கர்ப்பமாக இருக்கும் அமலா பால்... மஞ்ச காட்டு மைனாவாக மாறி எடுத்து கொண்ட பிரங்னென்சி போட்டோ ஷூட்!