- Home
- Gallery
- Anna Serial: நான் இருக்கேன்... ரத்னாவுக்கு ஷண்முகம் கொடுத்த வாக்கு! திருமணம் நடக்குமா? அண்ணா சீரியல் அப்டேட்!
Anna Serial: நான் இருக்கேன்... ரத்னாவுக்கு ஷண்முகம் கொடுத்த வாக்கு! திருமணம் நடக்குமா? அண்ணா சீரியல் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலின் இன்றைய அப்டேட் குறித்து பார்க்கலாம்.

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் மற்றும் வைகுண்டம் கோவிலுக்கு வர பாக்கியம், சௌந்தர பாண்டியிடம் விஷயத்தை சொல்லி வரவேற்க கூப்பிட சௌந்தர பாண்டி வர மறுக்கிறார்.
இதனை தொடர்ந்து ரொம்ப ஓவராக பண்ணா சந்தேகமும் வந்து விடும் என எடுத்து சொல்லி முத்து பாண்டியும் பாண்டியம்மாவும் சௌந்தரபாண்டியை கூட்டி செல்கின்றனர். வேண்டா வெறுப்பாக இருவரையும் வரவேற்க ஷண்முகம் சிரித்த முகத்துடன் வரவேற்றால் தான் வருவோம் என அடம் பிடிக்கின்றனர்.
வேறு வழியின்றி சௌந்தரபாண்டி சிரித்து கொண்டே அவர்களை வரவேற்க இருவரும் கோவிலுக்குள் வருகின்றனர். கோவிலில் சாமி கும்பிட்டு கொண்டிருக்கும் கவிதா ஷண்முகம் வந்ததும் அவன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி தனக்கு அக்கா மாமாவை தவிர யாரும் இல்லை என சொல்கிறாள்.
அதை கேட்டு ஷண்முகம் இனிமே உனக்கு அண்ணனாக இருந்து இந்த கல்யாணத்தை நான் நடத்தி கொடுக்கிறேன் என வாக்கு கொடுக்கிறான். பிறகு தட்டு மாற்றுவதற்கான வேலைகள் நடக்கிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.