Leo: நேற்று அப்படி பேசிட்டு... அந்தர் பல்டி அடித்த மன்சூர் அலிகான்! படக்குழு பொத்தி வச்ச அந்த ரகசியத்தை லீக்!
லியோ படத்தில் இருதயராஜ் டிசோசாவாக நடித்துள்ள மன்சூர் அலிகான், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனக்கு தம்மத்தூண்டு ரோல் கொடுத்ததாக தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்திய நிலையில், தற்போது அப்படியே அந்தர் பல்டி அடித்துள்ளார்.
Mansoor Alikhan
தமிழ் திரையுலகில் 90-களில் முரட்டு வில்லனாக நடித்து பிரபலமானவர் மன்சூர் அலிகான். சமீப காலமாக நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழ் சினிமாவில் டாப் இயக்குனராக உள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் இருதயராஜ் டிசோசாவாக ஒரு குட்டி ரோலில் நடித்திருந்தார்.
Mansoor Alikhan
இந்நிலையில் நேற்று மன்சூர் அலிகான் வெளியிட்ட அறிக்கையில்... “500 கோடி ரூபாய் பணத்தை போட்டு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்து ரூ.1000 கோடி வசூலுக்காக உழைக்கிறோம், ஆனா அரசியல்வாதிகள் ஒரே ஒரு கையெழுத்தை போட்டுட்டு ஆயிரம் கோடி, 2000 கோடினு ஆட்டையப்போடுறான்.
பாட்டி வயதிலும் குறையாத பியூட்டியோடு 57-வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை நதியா - வைரலாகும் வீடியோ
Mansoor Alikhan
லோகேஷ் என்ன வச்சு அந்த மாதிரி ஒரு அரசியல் படம் எடுக்கலாம்ல, அதைவிட்டுட்டு, தம்மாத்தூண்டு ரோலுக்கு அம்மாம் பெரிய பில்டப் கொடுத்துட்டு இருக்கீங்க. இல்லேனா வாங்க பாலஸ்தீனத்துக்கு விடுதலை வாங்கித்தரலாம். 500 மிலிட்டரி டேங்கர், 500 போர் விமானங்களை எடுத்துட்டு வாங்க போருக்கு போய் அங்குள்ள எல்லா மிலிட்டரி தளங்களையும் அழிச்சிட்டு வருவோம். பாவம் அப்பாவிங்கலாம் சாகுறாங்க. சும்மா, டம்மி துப்பாக்கியையும், அட்டக்கத்தியையும் கொடுத்துக்கிட்டு, வாங்க போருக்கு போகலாம் லோகேஷ்” என கூறி இருந்தது பரபரப்பாக பார்ப்பட்டது.
Mansoor Alikhan
ஆனால் திடீர் என அந்தர் பல்டி நடித்துள்ள மன்சூர் அலிகான் மற்றொரு அறிக்கை வெளியிட்டு, லியோ படத்தையும்... லோகேஷ் கனகராஜையும் புகழ்ந்து தள்ளியுள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில், "யாவோரும் இன்புற்றிருக்க நினைப்பது வேயின்றி யாமொன்றறியேன் பராபரமே!.. குண்டு போட்டு மனிதம் கொல்லும் நரமாமிச பட்சிகளின் உலக அரசியல் மன அழுத்தத்தில், நேற்று மீம்ஸ் போன்று நான் போட்ட பதிவு என்னையே அதிர்ச்சியடைய வைத்தது. 'லியோவில் தம்மாத்தூண்டு' என்ற சொல் பதம் என்னையே நான் மன்னிக்க முடியாதவனா ஆக்கிவிட்டது! அதற்காக லோகேஷ், அவரது குழுவினர் சக்தி, சந்தோஷ், நிமெட், கௌதம். பாலா, ராம்குமார் ஆகியோர் எவ்வளவு மெனக்கெட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
லோகி ஒரு திரைச் சித்தன். 3000 பேரை வைத்து வேலை வாங்குகையில், இருக்கிற இடம் தெரியாமல் நாமெல்லாம் கைபேசியை வைத்து மகிழ்ச்சிக்கு பயன்படுத்துகையில், அவர் அது போன்ற உபகரணங்களை பாத்திரங்களை படைப்பதற்கு, சதா சிந்தனையுடன் தேனியைப் போன்று செயலாற்றுவது கண்டேன்!
mansoor ali khan
சில பாத்திரப் படைப்புக்கள் நீட்ட குறைத்தலின் போது, நாம் ஒன்றும் செய்ய முடியாது. கேப்டன் பிரபாகரன் 15,000 அடி. ஆனால் எடுக்கப்பட்டது ஒரு லட்சத்து பதினாயிரம் அடி! என் வாழ்நாளில் 350'க்கு மேற்பட்ட இயக்குனர்களுடன் நான் பணியாற்றி இருந்தாலும், லோகியைப் போன்று வெற்றியை கொடுத்தே ஆகவேண்டும் என்று அலட்டிக் கொள்ளாமல் குடும்பம் மறந்து, உடலை வருத்திய படைப்பாளியை பார்த்ததில்லை. நான் தம்பி விஜயுடன் பல படங்களில் மெயின் வில்லனாக தேவா, நாளைய தீர்ப்பு, மாண்புமிகு மாணவன் என அழிச்சாட்டியம் செய்திருந்தாலும், அந்த காலகட்டம் வேறு! இப்போது குடும்பம் குடும்பமாக, குழு குழுவாக திரையரங்கை திருவிழாவாக மக்களை மகிழ்விக்க பாடுபட வேண்டியிருக்கிறது. தவறாக வசூல் காட்டி வெளியே Heena வைப்போல் பலர் குறைக்கின்றனர்.
மணி என்னை பிரேக்-கப் பண்ண காரணம் அவர் தான்! முதல் முறையாக உண்மையை உடைத்த முன்னாள் காதலி பெலினா!
mansoor ali khan
நான் யதேச்சையாக பேசுவது ஊடகங்களில் பலமாக பரப்படைகிறது. பிணியில் கிடக்கும் நம் மண்ணை மீட்க இனி தன்னலம் மறந்து அரசியல், திரைப் பணியில் என்னை அர்பணிப்பேன். என்னுடைய சொந்தப்பட படைப்பு காரணமாக லியோவில் என்னை நினைத்தபடி, உடலை வடிவமைத்து அர்பணிக்க முடியவில்லை. அதற்காக நான் வருத்தப்படுகிறேன். இன்றிலிருந்து சுக, தன்னலம் துறந்த மன்சூர் அலிகான் மக்களுக்காக, மண்ணின் பெருமைக்காக! சக்சஸ் மீட்டில் நவம்பர் ஒன்றாம் தேதி சந்திப்போம்... நெஞ்சார்ந்த நன்றிகள்! என சக்ஸஸ் மீட் குறித்து படக்குழு ரகசியம் காத்துவந்த தகவலையும் லீக் செய்துள்ளார் மன்சூர் அலிகான்.