- Home
- Gallery
- மஞ்சுளா விஜயகுமார் மகள் ப்ரீத்தா - ஹரிக்கு திருமணம் ஆகி 22 வருஷம் ஆகிடுச்சா? வைரலாகும் வெட்டிங் போட்டோஸ்!
மஞ்சுளா விஜயகுமார் மகள் ப்ரீத்தா - ஹரிக்கு திருமணம் ஆகி 22 வருஷம் ஆகிடுச்சா? வைரலாகும் வெட்டிங் போட்டோஸ்!
நடிகை ப்ரீத்தா விஜயகுமார், இயக்குனர் ஹரியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களின் த்ரோ பேக் வெட்டிங் போட்டோஸ், மீண்டும் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகையாக அறியப்பட்டவர் மஞ்சுளா. நடிகர் விஜயகுமாரை இரண்டாம் திருமணம் செய்து கொண்ட இவருக்கு, வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என மூன்று மகள்கள் பிறந்த நிலையில், இவர்கள் மூவருமே அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகினர்.
ஆனால் மஞ்சுளாவின் மூன்று மக்களுமே... சினிமாவில் அறிமுகமான சில வருடங்களிலேயே அடுத்தடுத்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனதோடு, திரையுலகை விட்டும் ஒதுங்கினர். இதில் விதிவிலக்கு என்றால் மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதா தான். இதுவரை 3 திருமணம் செய்த வனிதா டான்ஸ் மாஸ்டர் ராபட்டுடன் காதல் சர்ச்சையில் சிக்கியவர்.
Indian 2 Trimmed: வெட்டி வீசப்படும் இந்தியன் 2 பாகங்கள்; எவ்வளவு நிமிடங்கள் தெரியுமா? காரணம் என்ன?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரீ-என்ட்ரி கொடுத்த இவர், தற்போது திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார். அதே போல் வனிதாவின் மகள் ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம், சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த நிலையில், கூடிய விரைவில் வெள்ளித்திரையில் நடிக்க தயாராகி வருகிறார்.
மஞ்சுளாவின் இரண்டாவது மகளான ப்ரீத்தா, தெலுங்கில் 1997-ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமானார். இதை தொடர்ந்து தமிழில் 1998-ஆம் ஆண்டு சந்திப்போமா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் தர்மா, பொண்ணு வீட்டுக்காரன், படையப்பா, சுயம்வரம், காக்கை சிறகினிலே போன்ற பல படங்களில் நடித்தார். சினிமாவில் முன்னணி நடிகையாக இவரால் நிலைக்க முடியாத நிலையில், இயக்குனர் ஹரியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
2002-ஆம் ஆண்டு ப்ரீத்தாவுக்கும், ஹரிக்கும் திருமணம் ஆன நிலையில்... தற்போது இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்களின் மூத்த மகன் ஹம் என்கிற குறும்படத்தை இயக்கி அதில் நடித்தும் இருந்தார். விரைவில் வெள்ளித்திரையில் ஹீரோவாக அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹரி - ப்ரீத்தா ஜோடிக்கு திருமணம் ஆகி 22 வருடங்கள் ஆகும் நிலையில் இவர்களின் த்ரோ பேக் வெட்டிங் போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.