மீசவச்ச குழந்தைனு சும்மாவா சொன்னாங்க... பேரன்களிடம் சூப்பர்ஸ்டார் எப்படி பழகுவார்? ரஜினி மனைவி சொன்ன சீக்ரெட்
நடிகர் ரஜினிகாந்த்துக்கும் அவரது பேரன்களுக்கும் இடையேயான பாசம் குறித்து அவரது மனைவி லதா ரஜினிகாந்த் பழைய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.
Rajinikanth Grandsons
தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். 72 வயதில் செம்ம எனர்ஜியோடு நடித்துவரும் ரஜினிக்கு இன்றளவும் மவுசு குறையவில்லை. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.650 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்தது. ஜெயிலர் பட வெற்றிக்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்துக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
Rajinikanth with yatra and linga
ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள லால் சலாம் என்கிற திரைப்படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தை அவரது மகள் ஐஸ்வர்யா தான் இயக்கி உள்ளார். இதையடுத்து ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடிக்கிறார் ரஜினி, இப்படத்தை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தலைவர் 171 படத்தில் நடிக்க இருக்கிறார். இவ்வாறு பிசியாக இருக்கும் ரஜினி பற்றி அவரது மனைவி லதா ரஜினிகாந்த் பேட்டி ஒன்றில் பேசியது குறித்து பார்க்கலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Rajinikanth grandson bonding
ரஜினிக்கும் அவரது பேரன்களுக்கும் இடையேயான பாசம் பற்றி பேசிய அவர், ஐஸ்வர்யாவின் மூத்த மகன் யாத்ரா, வீட்டில் எப்பொழுதும் ரஜினியின் ஸ்டைலை இமிடேட் செய்துகொண்டே இருப்பான் என கூறி உள்ளார். அவன் தன்னுடைய தாத்தாவை சூப்பர்ஸ்டாராக ரசிப்பதாகவும், அடிக்கடி நெருப்புடா, மகிழ்ச்சி என கபாலி பட டயலாக்குகளை சொல்லிக்கொண்டே இருப்பான் என்றும் உற்சாகம் பொங்க பேசி இருக்கிறார் லதா ரஜினிகாந்த்.
Latha Rajinikanth about superstar
கணவராக, அப்பாவாக அல்லது தாத்தாவாக இதில் எந்த ரஜினி பெஸ்ட் என்கிற கேள்விக்கு தாத்தா என உடனே பதிலளித்த லதா ரஜினிகாந்த், அவர் ரொம்ப பிசியாக இருந்த சமயத்தில் அப்பாவாக இருந்தார். அப்போ இருந்த வேலைப்பழு காரணமாக குழந்தைகளுடன் அவரால் நிறைய நேரம் செலவிட முடியாமல் போனது. ஐஸ்வர்யா, செளந்தர்யா குழந்தைகளாக இருந்தபோது என்னவெல்லாம் செய்ய முடியாமல் போனதோ, அதனை தற்போது பேரக்குழந்தைகளுடன் செய்து வருகிறார். குழந்தையாகவே மாறி அவர்களுடன் பேசுவது, விளையாடுவது என ரஜினி பேரன்களோடு செம்ம ஜாலியாக இருப்பார் என லதா கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... கார்த்திக் போட்ட ஸ்கெட்ச்... சிக்காமல் இருக்க தீபா எடுத்த அதிரடி முடிவு - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்