செம்ம மாஸ்..!! பிரபாஸின் அடுத்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் உட்பட.. 2 சூப்பர் ஸ்டார் நடிகர்கள்.!
நடிகர் பிரபாஸ் நடிக்கும் பக்தி படமான 'கண்ணப்பா' படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா உட்பட இரண்டு, சூப்பர் ஸ்டார் பிரபலங்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருமணத்திற்கு பிறகும் கொஞ்சம் கூட மவுசு குறையாத நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா, பாலிவுட் திரையுலகில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்த ஜவான் படம் வசூலில் உலக அளவில் மாஸ் காட்டி வருகிறது. ஒரே வாரத்தில் சுமார் 650 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக அதிகார பூர்வ தகவலும் வெளியானது.
இந்த படத்தை தொடர்ந்து, மிகப்பெரிய பட்ஜட்டில், பிரபாஸ் நடிப்பில் உருவாக உள்ள 'கண்ணப்பா' என்கிற பான் இந்தியா திரைப்படத்தில் இவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
பக்தி கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில், பிரபாஸ் சிவன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு ஜோடியாக பார்வதி கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாரா மிகவும் பொருத்தமாக இருப்பார் என எண்ணிய படக்குழு, அவரிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறதாம்.
மல்டி ஸ்டார் படமாக இது எடுக்கப்பட உள்ள நிலையில், பல முன்னணி பிரபலங்கள் இந்த படத்தில் நடிக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், மிகவும் வலுவான கதாபாத்திரத்தில் நடிக்க, படக்குழு மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோரிடமும் அணுகியுள்ளதாம். இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஏற்கனவே பிரபாஸ் நடிக்க உள்ள வரும் கல்கி 2898 ஏடி’ என்ற திரைப்படத்தில் கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்க இருக்கும் நிலையில் ’கண்ணப்பா’ திரைப்படமும் அவரது திரையுலக வாழ்வில் ஒரு திருப்புமுனை படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.