வரிக்குதிரை டிசைன் சேலை! மாராப்பை நழுவ விட்டு ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் பிராகெட் போடும் கீர்த்தி! கிக் போட்டோஸ்
நடிகை கீர்த்தி சுரேஷ் வரிக்குதிரை போல் வெள்ளை மற்றும் கருப்பு நிற சேலையில், கிக் ஏற்றும் கவர்ச்சியோடு வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ் அறிமுகமான புதிதில் பல விமர்சனங்களை சந்தித்தாலும், இரண்டு மூன்று வருடத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் ரசிகர்களால் அதிகம் தேடப்படும் முன்னணி நடிகையாக அவதாரம் எடுத்து விட்டார். இவரின் இந்த அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணம், எப்படி பட்ட சூழ்நிலையிலும் பின்வாங்கி விடாமல், தொடர்ந்து தரமான படத்தில் நடிக்க வேண்டும் என போராடியது தான்.
தமிழில் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படங்கள் என்றால், அது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் நடித்த 'ரஜினிமுருகன்' மற்றும் 'ரெமோ' ஆகிய படங்கள் தான். இந்த இரு படங்களின் வெற்றியால், அடுத்தடுத்து விஜய், சூர்யா, ரஜினி, விக்ரம், தனுஷ் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை கைப்பற்றினார். அதே போல் தெலுங்கிலும் சிரஞ்சீவி, நானி, மகேஷ் பாபு ஆகிய டாப் நடிகர்களின் படங்களை குறிவைத்து கீர்த்தி நடித்து வருகிறார்.
அதே போல் இவரின் நடிப்பு திறமைக்கு தீனி போடுவது போல் அமைந்த திரைப்படம் என்றால், அது நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த 'மகாநடி' திரைப்படம் தான். இந்த படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார் கீர்த்தி . இந்த படத்திற்கு பின்னர் அதிகப்படியாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையே தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது கூட இவரின் கைவசம் ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா ஆகிய படங்கள் உள்ளது. இதை தவிர ஜெயம் ரவி நடித்து வரும் சைரன், மற்றும் தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
நடிப்பில் ஒரு பக்கம் அம்மணி படு பிசியாக இருந்தாலும், சமூக வலைத்தளத்தில் தன்னுடைய ரசிகர்களை குதூகல படுத்தவும் கீர்த்தி மறந்ததில்லை. அந்த வகையில் தற்போது, வரிக்குதிரை போல் கோடு போட்ட சேலையில், ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து... ரசிகர்கள் மனதிற்கு பிராகெட் போடும் விதத்தில் ஹாட்டாக வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாக பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.