MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • "ஒரு மாசம் வெயிட் பண்ணுங்க".. அடுத்த படம் குறித்து மனம் திறந்த நெல்சன் - நம்ம D தான் அந்த படத்தின் ஹீரோவா?

"ஒரு மாசம் வெயிட் பண்ணுங்க".. அடுத்த படம் குறித்து மனம் திறந்த நெல்சன் - நம்ம D தான் அந்த படத்தின் ஹீரோவா?

Nelson Dilipkumar Next Movie : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் பட வெற்றியை தொடர்ந்து தனது பட பணிகளுக்கு தயாராகியுள்ளார் நெல்சன் திலீப்குமார்.

2 Min read
Author : Ansgar R
Published : Dec 24 2023, 11:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Kolamavu Kokila

Kolamavu Kokila

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான நயன்தாராவின் "கோலமாவு கோகிலா" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குனராக கால் பதித்தவர் தான் நெல்சன் திலீப்குமார். தனக்கென்று ஒரு தனி ஸ்டைல் அமைத்து அதில் பயணித்து வரும் ஒரு மிகச் சிறந்த இயக்குனர் அவர். குறிப்பாக 2021 ஆம் ஆண்டு பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அவர் இயக்கிய "டாக்டர்" திரைப்படம் 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் லிஸ்டில் இணைந்தது.

சூப்பர்ஸ்டாரையும் விட்டுவைக்காத தோல்விகள்... ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பிளாப் ஆன திரைப்படங்கள் லிஸ்ட் இதோ

24
Director Nelson

Director Nelson

அது மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நெல்சன் திலீப் குமாருக்கு ஒரு மிகப்பெரிய வரவேற்பையும் கொடுத்தது. டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருக்கு கிடைத்த ஒரு மாபெரும் வாய்ப்பு தான் பீஸ்ட். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் தளபதி விஜய் அவர்களை வைத்து அவர் இயக்கிய முதல் திரைப்படம் அது. படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருந்தாலும் விமர்சன ரீதியாக பெரும் சறுக்கலை சந்தித்தது. 

34
Thalapathy vijay

Thalapathy vijay

அதன் பிறகு ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் நெல்சன் திலீப் குமார் நிராகரிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த சூழலில் தான் இந்த 2023 ஆம் ஆண்டில் மிகச்சிறந்த படங்களில் ஒன்றான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி வெளியிட்டு மீண்டும் தான் ஒரு வெற்றி இயக்குனர் என்பதை நிரூபித்தார் நெல்சன் திலிப் குமார்.

44
Dhanush Movie

Dhanush Movie

ஜெயலர் பட வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த திரைப்பட பணிகளை விரைவில் துவங்க உள்ளதாக அவர் கூறியுள்ளார். அண்மையில் ஒரு விருந்து வழங்கும் விழாவில் பேசிய இயக்குனர் நெல்சன் திலிப் குமார், இன்னும் ஒரு மாத காலத்தில் தனது அடுத்த படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று அறிவித்துள்ளார். ஏற்கனவே அந்த படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளை அவர் முடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்பு வெளியான தகவல்களை வைத்து பார்க்கும்போது, தனுஷ் தனது 51வது திரைப்படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

About the Author

AR
Ansgar R
தனுஷ்
ரஜினிகாந்த்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved