- Home
- Gallery
- Rakul : சிக்கென்ற டி-ஷர்ட்.. அதற்கு ஏற்ற ஜீன்ஸ் - மாடர்ன் உடையில் அசத்தும் ரகுல் ப்ரீத் சிங் - ஹாட் கிளிக்ஸ்!
Rakul : சிக்கென்ற டி-ஷர்ட்.. அதற்கு ஏற்ற ஜீன்ஸ் - மாடர்ன் உடையில் அசத்தும் ரகுல் ப்ரீத் சிங் - ஹாட் கிளிக்ஸ்!
Actress Rakul Preet Singh : புது தில்லியில் பிறந்து, தற்பொழுது இந்திய மொழிகள் பலவற்றில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ரகுல் பிரீத் சிங். அவருக்கு இந்த ஆண்டு துவக்கத்தில் திருமணம் நடந்து முடிந்தது.

Rakul
கடந்த 1990ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி புது டெல்லியில் பிறந்த நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு வயது 33. கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ஒரு கன்னட திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை இவர் தொடங்கினார்.
Rakul Preet Singh
தொடர்ச்சியாக கன்னடம் மற்றும் தெலுங்கு திரை உலகத்தில் பயணித்து வந்த இவர், கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "யுவன்" என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதே போல 2012ம் ஆண்டு அருண் விஜய் நடிப்பில் வெளியான "தடையறத் தாக்க" என்கின்ற திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல வரவேற்பை கொடுத்தது.
Actress Rakul
தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங், இறுதியாக தமிழில் இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் "அயலான்" திரைப்படத்தில் நடித்திருந்தார்.
Rakul Photos
திருமணத்திற்கு பிறகும் தொடர்ச்சியாக நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் இந்த ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் தேதி உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் இந்தியன் 2 திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.