- Home
- Gallery
- கார்த்திகை தீபம் சீரியல் : கார்த்தியின் உயிருக்கு ஆபத்து.. ரம்யா செய்யும் சதி வேலையை கண்டுபிடிப்பாளா தீபா?
கார்த்திகை தீபம் சீரியல் : கார்த்தியின் உயிருக்கு ஆபத்து.. ரம்யா செய்யும் சதி வேலையை கண்டுபிடிப்பாளா தீபா?
கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் ரம்யாவிடம் என்னால பெங்களூருக்கு வர முடியாது என்று சொன்ன நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Karthigai deepam serial
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் ரம்யாவிடம் என்னால பெங்களூருக்கு வர முடியாது என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது வீட்டில் தீபா அண்ணி மைதிலியிடம் கோபமாக பேசி வெளியே அனுப்ப கார்த்திக் ரூமுக்குள் வந்து நிற்க, தீபா அது பிரம்மை என நினைத்து எனக்கு உங்கள் ஞாபகமாகவே இருக்கு என்று பேச, நான் தான் உங்க முன்னாடி வந்து நிற்கிறேன் என்று கார்த்திக் சர்ப்ரைஸ் கொடுக்கிறான்.
Zee Tamil Karthigai deepam serial
உடனே தீபா எனக்காக நீங்க பெங்களூர் போலயா அப்படின்னு கோவிலுக்கு கூட்டிட்டு போங்க என்று சொல்ல, கார்த்திக் அவளை கோவிலுக்கு அழைத்துச் செல்கிறான். இருவரும் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட, ரம்யா இதை அனைத்தையும் வெளியில் இருந்து கவனித்துக் கொண்டிருக்கிறாள். அதன் பிறகு இவர்கள் கோவிலில் இருந்து வெளியே வந்ததும் கார்த்திக்கு தெரிந்த ஒருவர் அவரைப் பார்த்து பேச, தீபா பழக்கடை அருகே வந்து நிற்க, அப்போது யாரோ ஒருவன் ஒரு லெட்டரை கொண்டு வந்து கொடுக்கிறான். தீபா அதைப் பிரித்துப் பார்க்க உன் புருஷன் உயிருக்கு ஆபத்து என்று எழுதி இருக்க அதிர்ச்சி அடைகிறாள்.
இதையும் படியுங்கள்... கைவிட்டு போகும் தர்மகத்தா பதவி... அதிர்ச்சியில் பைத்தியமான சௌந்தரபாண்டி? - அண்ணா சீரியல் அப்டேட்
Karthigai deepam serial Update
அந்த நேரம் பார்த்து இளநீர் கடைக்காரர் கார்த்தியை பார்த்து கையில் கத்தியுடன் தீபா பதறி போய் கார்த்திக்கை பிடித்து தள்ளிவிட்டு உங்களை கொல்ல வரான் என்று சொல்கிறாள். நான் இளநீர் கடைக்காரன் இளநீ வெட்ட தான் வந்தேன் என்று சொல்ல, கார்த்திக் அவரை அனுப்பி வைக்கிறான். தீபா உங்க உயிருக்கு ஆபத்துன்னு ஒரு லெட்டரை ஒருத்தன் வந்து குடுத்துட்டு போனான் என்று சொல்லி அந்த பேப்பரை கொடுக்க அதில் எதுவும் இல்லாமல் இருக்க, தீபா அதிர்ச்சி அடைகிறாள். பிறகு வீட்டுக்கு வந்து விஷயத்தை சொல்ல, அபிராமி தீபா ஏதோ அப்செட்டாகவே இருக்கா என்று சொல்கிறாள்.
Karthigai deepam serial Today Episode
இருப்பினும் கார்த்தியை நம்பும் தீபா, போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று தன்னுடைய நண்பனிடம் நடந்த விஷயத்தை சொல்ல, அவர் எனக்கு தெரிஞ்ச பாரன் சீக் டிபார்ட்மெண்ட் பிரண்டு ஒருத்தன் இருக்கான் அவன் கிட்ட கொடுத்து பார்க்கலாம் என்று சொல்லி கொடுக்க, அதை பரிசோதனை செய்து பார்க்க மேஜிக் பெண்ணால் எழுதி இருப்பது தெரிய வருகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... திருமணமான நடிகருடன் கள்ளத்தொடர்பு; விஷயம் லீக் ஆனதால் நடிப்பதற்கே தடைவிதிக்கப்பட்ட தமிழ் நடிகை பற்றி தெரியுமா?