புதுமண தம்பதிகள்.. குடும்பத்தோடு சென்று வாழ்த்திய தம்பி அருண் விஜய் மற்றும் அக்கா அனிதா - வைரல் கிளிக்ஸ்!
பிரபல நடிகர் விஜயகுமார், தனது முதல் மனைவி முத்துக்கன்னு, மகன் அருண் விஜய், மகள்கள் அனிதா விஜயகுமார் மற்றும் ப்ரீத்தா விஜயகுமார் ஆகியோருடன் சென்று தங்கள் உறவினர் ஒருவரின் திருமண வைபவத்தில் கலந்துகொண்டுள்ளார்.
Arun Vijay
நடிகர் அருண் விஜய் தற்போது பாலாவின் திரைப்படத்தில் நடித்து வரும் அதே நேரம், பல கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றார். இந்நிலையில் அவர் தனது குடும்பத்துடன் இணைந்து திருமணம் ஒன்றுக்கு சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளார்.
Anitha vijayakumar and family
அதே போல இந்த திருமண நிகழ்வில், அருண் விஜயின் அக்கா அனிதா விஜயகுமார் அவர்களும் கலந்துகொண்டுள்ளார். அவர் கத்தார் நாட்டில் மருத்துவராக பணியாற்றி வருகின்றார். அண்மையில் சென்னையில் அவர் ஒரு வீடு வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Vijayakumar Family
மேலும் முன்னாள் நடிகை ப்ரீத்தா ஹரி அவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். ப்ரீத்தா இறுதியாக தமிழில் வெளியான புன்னகை தேசம் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Arun Vijay Family
நடிகர் விஜயகுமாரின் முதல் மனைவி முத்துக்கண்ணுவிற்கு பிறந்த குழந்தைகள் தான் கவிதா விஜயகுமார், அனிதா விஜயகுமார் மற்றும் அருண் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.