வீலிங் செய்யும்போது ஏற்பட்ட விபரீதம்.. அந்தரத்தில் பரந்த பைக் - மஞ்சள் வீரன் TTF வாசனுக்கு ஏற்பட்ட விபத்து!
இந்த டிஜிட்டல் உலகில் சினிமாவை போல் யூடியூப் பிரபலங்களுக்கும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் பைக் ரைடு மூலம் பிரபலமான ஒருவர் தான் TTF வாசன், தற்போது அவர் ஒரு விபத்தில் சிக்கியுள்ளது அவருடைய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

யூடியூப் சேனல் மூலம் பிரபலமடைந்தவர்களில் டிடிஎப் வாசனும் ஒருவர். பைக் ரைடு செய்யும் வீடியோக்களை பதிவிட்டு 2கே கிட்ஸின் பேவரைட் யூடியூபர் ஆனவர் தான் டிடிஎப் வாசன். யூடியூப் மூலம் எந்த அளவுக்கு பேமஸ் ஆனாரோ, அதே அளவு பல சர்ச்சையிலும் சிக்கி உள்ளார் அவர். சர்ச்சைக்குரிய யூடியூப் வீடியோக்களால் இவர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்த சம்பவங்களும் அரங்கேறின
அதுமட்டுமின்றி ஒருமுறை இவர் ஒரு கடை திறப்பு விழாவுக்கு சென்றபோது, இவரது ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவர்களுக்கே சவால் விட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் TTF வாசன். இப்படி தொடர் சர்ச்சைகளில் சிக்கி வந்த TTF வாசன் சில மாதங்களுக்கு முன்பு அதிரடியாக சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். மஞ்சள் வீரம் என்ற படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமானார்.
இந்த படத்தை செல்அம் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தை தி பட்ஜெட் பிலிம் கம்பேனி என்கிற நிறுவனம் தயாரித்து வருகிறதாம். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கையில் சூலாயுதத்துடன் புல்லட்டில் வீலிங் செய்தவாரு டிடிஎப் வாசன் வலம்வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று தனது வழக்கமான பைக் ரைடை மேற்கொண்ட டிடிஎஃப் வாசன், தனது பைக்கில் நெடுஞ்சாலையில் வீலிங் செய்துள்ளார். அப்பொழுது கட்டுப்பாட்டை இழந்த அந்த இருசக்கர வாகனம், அந்தரத்தில் சில அடி தூரம் பறந்து, சுமார் இரண்டு முறை சுழன்று சாலையின் ஓரம் சென்று விழுந்து நொறுங்கியது. இதில் டிடிஎஃப் வாசனுக்கு கைகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மருத்துவமனையில் தற்பொழுது அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
குருவை மிஞ்சிய சிஷியன்... இயக்குனர் ஷங்கரின் சாதனையை ஐந்தாவது படத்திலேயே தகர்த்தெறிந்த அட்லீ