MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • இத மட்டும் செய்யுங்க.. இனி வீட்டில் கரப்பான் பூச்சி, பல்லிகள் தொல்லை இருக்காது!

இத மட்டும் செய்யுங்க.. இனி வீட்டில் கரப்பான் பூச்சி, பல்லிகள் தொல்லை இருக்காது!

கரப்பான் பூச்சிகள் அல்லது பல்லிகளை வீட்டில் இருந்து வெளியேற்ற சில வைத்தியங்கள் நிச்சயம் உங்களுக்கு உதவும்.அவை..

2 Min read
Kalai Selvi
Published : Mar 13 2024, 11:39 AM IST| Updated : Mar 13 2024, 11:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

நம் வீட்டில் பூச்சிகள், கரப்பான் பூச்சிகள் அல்லது பல்லிகள் நடமாடுவதை அடிக்கடி பார்க்கிறோம். அதை வீட்டிலிருந்து விரட்ட பல நடவடிக்கைகளை எடுக்கிறோம். ஏன் இன்னும்  சொல்லப்போனால், சில நேரங்களில் விலையுயர்ந்த இரசாயன மருந்துகளும் பயன்படுத்தப்படுகொறோம். இந்த மருந்துகள் அவற்றை வீட்டில் இருந்து விரட்ட பெரிதும் உதவுகிறது.

27

ஆனால்,  இந்த மருந்துகள் நம் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானவை. மேலும், வீட்டில் சிறிய குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இருந்தால், இந்த மருந்தை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்நிலையில், எந்தவித ராசாய மருந்துகளும் உபயோகிக்காமல் 
சில வீட்டு வைத்தியங்கள் மூலம் பூச்சிகள், பல்லிகளை வீட்டில் இருந்து விரட்டலாம். அவை நிச்சயமாக உங்களுக்கு உதவும். அதற்கான தீர்வுகள் என்னவென்று பார்க்கலாம்.

37

முட்டை ஓடு: வீட்டிலிருந்து பல்லிகளை விரட்ட முட்டை ஓடுகள் சிறந்த தீர்வாகும். ஜன்னல்களில் முட்டை ஓடுகளை வைக்கவும். இதனால் பல்லிகள் வீட்டிற்கு வரமாட்டார். ஆனால் ஒவ்வொரு வாரமும் முட்டை ஓட்டை மாற்றவும் இல்லையெனில் அது அழுகலாம்.

47

வெங்காயம் மற்றும் பூண்டு தோல்கள்: நீங்கள் வெங்காயம் மற்றும் பூண்டு தோல்களை சேமித்து அவற்றை ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் வைக்கவும். அவற்றில் இருந்து வரும்  வாசனை பூச்சிகள் பல்லிகளை விரட்டும். அறையின் நடுவில் உள்ள சிறிய டேபிள் ஃபேனுக்கு அருகிலும் இதை வைக்கலாம்.
 

57

நாப்தலீன் பந்துகள்: நாப்தலீன் பந்துகள் ஈக்கள் மற்றும் பல வகையான பூச்சிகளை விரட்ட பெரிதும்  உதவும். இது குழந்தைகளை அதிலிருந்து பாதுகாக்கும்.

67

கிராம்பு: சமையலறையில் கரப்பான் பூச்சிகள் வராமல் இருக்க கிராம்புகளை பயன்படுத்த வேண்டும். பூச்சிகள் அதன் வாசனையால் எளிதில் ஓடிவிடும். இது தவிர கரப்பான் பூச்சிகள் வெளியேறும் இடங்களிலும் மண்ணெண்ணெய் தெளிக்கலாம்.

77

பெப்பர் ஸ்ப்ரே: மிளகைப்  பயன்படுத்தி வீட்டிலேயே பெப்பர் ஸ்ப்ரே செய்யலாம். மிளகு தூள் செய்து அதனுடன் தண்ணீர் சேர்க்கவும். அவ்வளவுதான் பெப்பர் ஸ்ப்ரே ரெடி. பெப்பர் ஸ்ப்ரேவை பூச்சிகள், பல்லிகள் உடலில் தெளிக்கும் போது உடலில் எரிச்சலூட்டுகிறது, இதனால் அவை வீட்டிற்குள் வருவதை தவிர்க்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
சமையலறை குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved