முதல் நாள் படப்பிடிப்புக்கு செல்லும் முன்.. கீர்த்தி சுரேஷுக்கு அம்மா மேனகா கொடுத்த 2 அட்வைஸ்! என்ன தெரியுமா?
தென்னிந்திய திரையுலகில் இன்று முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ்... முதல் நாள் படப்பிடிப்புக்கு செல்ல தயாராகிக்கொண்டிருந்த போது, தனக்கு அம்மா கூறிய இரண்டு அறிவுரை பற்றி பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
keerthy suresh
நடிகை நயன்தாராவுக்கு அடுத்தபடியாக, கதாநாயகிக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் பிரபல நடிகை மேனகா மற்றும் மலையாள பட தயாரிப்பாளர் சுரேஷின் மகள் என்பதால், சிறுவயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
பின்னர் 2013 ஆம் ஆண்டு, மலையாளத்தில் மோகன்லால் நடித்த 'கீதாஞ்சலி' என்கிற படத்தில் நாயகியாக அறிமுகமானார். இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அடுத்தடுத்து பல மலையாள படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், 2015 இரண்டாம் ஆண்டு இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான 'இது என்ன மாயம்' என்கிற படத்தில், விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார்.
Actress Keerthy Suresh
இவர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியை தழுவினாலும்... இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி நடித்த ரஜினி முருகன், ரெமோ, போன்ற படங்கள் வெற்றிவாகை சூடியது. தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பதில் ஆர்வம் காட்டிய கீர்த்தி சுரேஷ், தொடரி படத்தில் தனுஷுக்கு ஜோடியாகவும், பைரவா படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும் நடித்து குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் பட்டியலில் இணைந்தார்.
keerthy suresh
மேலும் இவருடைய சினிமா கேரியரில் மாஸ்டர் பீஸ் திரைப்படமாக அமைந்தது நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக அவதாரம் எடுத்த மகாநடி திரைப்படம் தான். இந்த திரைப்படம் ஒட்டுமொத்த திரையுலகினரையும் கவர்ந்த நிலையில், கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது.
மிதமான மேக்கப்பில்.. பச்சை நிற சல்வாரில் பாடாய் படுத்தும் பேரழகி..! வாணி போஜன் கியூட் போட்டோஸ்!
இந்த படத்திற்கு பின்னர் விஜய், விக்ரம், விஷால், போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வந்தாலும்... மற்றொருபுறம் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட பென்குயின், மிஸ் இந்தியா, குட் லக் சகி, போன்ற படங்களிலும் நடித்தார். கூடிய விரைவில் இவர் நடித்துள்ள ரகு தாத்தா, திரைப்படம் வெளியாகியுள்ளது.
அதேபோல் ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி, போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். பிரபாஸ் நடிப்பில் வெளியாகி 1100 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ள கல்கி 2898 திரைப்படத்தில் புஜ்ஜி என்கிற ரோபோவுக்கு வாய்ஸ் கொடுத்ததும் கீர்த்தி சுரேஷ் தான். தென்னிந்திய திரையுலகை கடந்து, அட்லீ தயாரிப்பில் உருவாகி வரும் பாலிவுட் திரைப்படமான 'பேபி ஜான்' படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
தனுஷ் நடிப்பில் வெளியான 'ராயன்' படத்தின் முதல் நாள் வசூலே இத்தனை கோடியா? தெறிக்கவிட்ட கலெக்ஷன்!
இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில்... தன்னுடைய அம்மா நான் ஒரு நடிகையாக மாறும் போது தனக்கு கொடுத்த இரண்டு அறிவுரைகள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, "நான் முதல் நாள் 'கீதாஞ்சலி' ஷூட்டிங் செல்ல கிளம்பிக் கொண்டிருந்த போது, அம்மா இரண்டு விஷயங்களை என்னிடம் சொன்னாங்க. ஒன்று நடிகையா இருக்கணும்னா பஞ்சுவலா இருக்கணும். டைம் ரொம்ப முக்கியம். இன்னொன்று யூனிட்டில் இருக்கிற சின்ன பையன்ல இருந்து, டைரக்டர் வரைக்கும் ஒரே மாதிரி பாக்கணும்.. எல்லோருக்கும் ஒரே மாதிரியா மரியாதை கொடுக்கணும் என்று சொன்னாங்க. அதை அன்று முதல் இன்று வரை கடைபிடித்து வருவதாகவும் கூறியுள்ளார்.