- Home
- Gallery
- மிதமான மேக்கப்பில்.. பச்சை நிற சல்வாரில் பாடாய் படுத்தும் பேரழகி..! வாணி போஜன் கியூட் போட்டோஸ்!
மிதமான மேக்கப்பில்.. பச்சை நிற சல்வாரில் பாடாய் படுத்தும் பேரழகி..! வாணி போஜன் கியூட் போட்டோஸ்!
நடிகை வாணி போஜன், பச்சை நிற சல்வார் அணிந்து மிகவும் எளிமையான லுக்கில் எடுத்து கொண்ட போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Vani Bhojan Photos:
சின்னத்திரையை தன்னுடைய அழகாலும், நடிப்பாலும் அலங்கரித்த நடிகை வாணி போஜன், பின்னர் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள், பெரிய அளவில் வெற்றிபெறவில்லை என்றாலும், அசோக் செல்வன் நடிப்பில் வெளியான 'ஓ மை கடவுளே' திரைப்படத்தில் இவருக்கு திரையுலகில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
Vani Bhojan Movies:
இந்த படத்திற்கு பின்னர், தமிழ் திரையுலக இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களால் கவனிக்கப்படும் நடிகையாக மாறிய வாணி போஜன், பரத், விக்ரம், விதார்த், விக்ரம் பிரபு போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
தனுஷ் நடிப்பில் வெளியான 'ராயன்' படத்தின் முதல் நாள் வசூலே இத்தனை கோடியா? தெறிக்கவிட்ட கலெக்ஷன்!
Anjamai Heroine Vani Bhojan:
வாணி போஜன் நடிக்கும் படங்கள் ஓஹோ என ஹிட் அடிக்காவிட்டாலும், ஓரளவு கவனிக்கப்படும் படங்களாக உள்ளன. அந்த வகையில் சமீபத்தில்... இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக வாணி போஜன் நடித்த அஞ்சாமை திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை குவித்தது. இந்த படத்தில் நீட் தேர்வு குறித்த கருத்தை அழுத்தமாக தெரிவித்திருந்தார் இயக்குனர்.
Vani Bhojan Upcoming movies:
ஹோம்லி லுக் மட்டும் இன்றி மாடர்ன் லுக்கில், நடிக்க கூடிய கதைக்களத்திலும், கலந்து கட்டி நடித்து வரும் வாணி போஜன், நடிப்பில் அடுத்தடுத்து பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, மற்றும் ஆர்யன் ஆகிய படங்கள் வெளியாக உள்ளது.
Green Salwar Photos:
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் வாணி போஜன் தற்போது பச்சை நிற சல்வாரில்... பேரழகியாக ஜொலிக்கும் போட்டோஸ் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.