கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை.. ஆட்சியர்கள் அறிவிப்பு.. எந்த மாவட்டங்கள் தெரியுமா?
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
School Leave
நாளை தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 32 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது.
School Holidays
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
School rain leave
அதுமட்டுமில்லாமல் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருப்பூர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/
Rain leave
இந்த நிலையில் குறிப்பிட்ட மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாகவும், ரெட் அலர்ட் காரணமாகவும் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்ட உள்ளது.
Tamilnadu
அதேபோல நெல்லை என்று அழைக்கப்படும் திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை (நவம்பர் 4) சிறப்பு வகுப்புகள் உட்பட அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
குறைந்த கட்டணத்தில் திருப்பதியை சுற்றி பார்க்க முடியும்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா