MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • நடிகைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய இளைஞர் அடித்துக் கொலை... பிரபல நடிகர் அதிரடி கைது - அதிர்ச்சியில் திரையுலகம்

நடிகைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய இளைஞர் அடித்துக் கொலை... பிரபல நடிகர் அதிரடி கைது - அதிர்ச்சியில் திரையுலகம்

Kannada actor Darshan Thoogudeepa arrested : கன்னட திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வரும் தர்ஷன், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
| Updated : Jun 11 2024, 03:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Kannada actor Darshan Thoogudeepa arrested

Kannada actor Darshan Thoogudeepa arrested

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தர்ஷன். கர்நாடக மாநிலத்தில் அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் எந்த அளவு பேமஸ் ஆக இருக்கிறாரோ அதே அளவு சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார். இவர் நடிகர் நிக்கி துக்ரல் உடன் தகாத உறவில் இருந்ததாகவும் அதை தட்டிக்கேட்ட தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் அவரது மனைவி விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் தர்ஷன் ஏற்கனவே தர்ஷன் கைதாகி பின்னர் விடுதலை ஆனார்.

24
Pavithra Gowda Darshan Arrested

Pavithra Gowda Darshan Arrested

இந்த நிலையில். தற்போது தர்ஷன் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் இம்முறை கொலை வழக்கில் சிக்கி தர்ஷன் கைதாகி இருக்கிறார். மெடிக்கலில் வேலை பார்த்து வந்த சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகா சுவாமி என்பவர் கடந்த ஜூன் 9ந் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு காமல்ஷில்பாயா என்கிற பகுதியில் உள்ள ஒரு கால்வாயில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. 

பின்னர் ரேணுகா சுவாமியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனை முடிவில் ரேணுகா சுவாமி அடித்து துன்புறுத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. பின்னர் ரேணுகா சுவாமி கொலை வழக்கில் இருவர் சரண்டர் ஆகி, தாங்கள் தான் கொலை செய்ததாக கூறி இருக்கின்றனர். பணப்பிரச்சனை காரணமாக அவரை கொன்றதாக அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்... அதிதி ஷங்கருக்கு போட்டியா? வனிதா விஜயகுமார் மகன் ஸ்ரீஹரிக்கு ஜோடியாக அறிமுகமாகும் பிரபல இயக்குனரின் மகள்!

34
Kannada Actor Darshan arrested

Kannada Actor Darshan arrested

ஆனால் போலீசாருக்கு இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என தெரியவர, கொலை செய்தது யார் என்பதை கண்டறிய தீவிர விசாரணையில் இறங்கியதில், ரேணுகா சுவாமி ஆன்லைன் வாயிலாக நடிகை பவித்ரா கெளடாவுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி வந்தது தெரியவந்தது. இதையடுத்து நடிகை பவித்ரா கெளடாவும் விசாரணை வளையத்துக்குள் சிக்கினார். பின்னர் தான் ஆன்லைனின் மெசேஜ் அனுப்பி டார்ச்சர் கொடுத்ததால் அவரை ஆள் வைத்து கொலை செய்தது கண்டறியப்பட்டு உள்ளது.

44
Darshan arrested in Renukaswamy Murder case

Darshan arrested in Renukaswamy Murder case

இந்த வழக்கில் பவித்ரா கெளடா உள்பட 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் தர்ஷனுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக தெரியவந்ததால் அவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தர்ஷன் நடிகை பவித்ராவுக்கு நெருக்கமானவர் ஆவார். மைசூரில் உள்ள பண்ணைவீட்டில் இருந்த நடிகர் தர்ஷனை கைது செய்த போலீசார் அவரை பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர். இந்த விவகாரம் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... மணிமேகலை முதல் சைத்ரா ரெட்டி வரை... வரிசையாக புதுப்புது சொகுசு கார்களை வாங்கி அடுக்கும் சின்னத்திரை பிரபலங்கள்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved