இந்த பக்கம் லியோ தாஸ்... அங்குட்டு ரோலெக்ஸ்! கமலின் பர்த்டேவில் சங்கமித்த எல்சியு ஸ்டார்ஸ்
கமல்ஹாசனின் 69-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், அவர் விஜய் மற்றும் சூர்யாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
kamalhaasan with vijay and suriya
தமிழ் சினிமாவில் வளர்ச்சிக்கு வித்திட்ட நடிகர் என்றால் அது கமல்ஹாசன் தான். கோலிவுட்டில் பல்வேறு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் வல்லவரான கமல், அன்று முதல் இன்று வரை சினிமாவில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வருகிறார். தற்போது 69 வயதிலும் பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் கமல், நேற்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக தன்னுடைய திரையுலக நண்பர்களுக்கு பர்த்டே பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
kamalhaasan Birthday Party
கமலின் பிறந்தநாள் விழாவில் ரோலெக்ஸ் சூர்யாவும் கலந்துகொண்டார். அவருடன் ஜெயிலர் பட நடிகர் ஷிவ ராஜ்குமார், பாலிவுட் நடிகர் அமீர்கான் மற்றும் தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் ஆகியோர் இணைந்து கமலுடன் எடுத்துக்கொண்ட குரூப் போட்டோ தான் இது.
kamalhaasan with Leo movie team
அதேபோல் நடிகர் கமல் அண்மையில் வெளியான விஜய்யின் லியோ படத்திற்கு குரல் கொடுத்து இருந்தார். இதன்மூலம் நடிகர் விஜய்யும் எல்சியுவில் இணைந்தார். கமலின் லியோவுக்காக டப்பிங் பேசியபோது நடிகர் விஜய்யும் அவரை நேரில் சந்தித்துள்ளார். அப்போது லியோ டீம் உடன் கமல் எடுத்துக் கொண்ட புகைப்படம் நேற்று கமல் பிறந்தநாளன்று வெளியிடப்பட்டது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
kamalhaasan lokesh kanagaraj
கமலின் மனம் கவர்ந்த இயக்குனர் பட்டியலில் இணைந்துள்ள லோகேஷ் கனகராஜும் கமல் பர்த்டே பார்ட்டியில் ஆஜரானார். கமலை வைத்து விக்ரம் என்கிற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜ், கமலின் வெறித்தனமான ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
kamalhaasan sivakarthikeyan
நடிகர் கமலின் பிறந்தநாள் விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனும் பங்கேற்றார். அப்போது கமலுடன் அவர் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் எஸ்.கே.21 படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது.
kamalhaasan jayam ravi
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தி உடன் வந்து கமலின் பர்த்டே பார்ட்டியில் கலந்துகொண்டார். இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தில் கமலுடன் இணைந்து நடித்து வருகிறார்.
kamalhaasan birthday party clicks
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், மலையாள நடிகர் துல்கர் சல்மான், நடிகர் நாசர், இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகர் பிரபு மற்றும் விக்ரம் பிரபு ஆகியோரும் கமலின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்... பிறந்தநாளுக்கு ராஜ விருந்து வைத்த கமல்ஹாசன்! நாவில் எச்சில் ஊறவைக்கும் எக்கச்சக்க ஐட்டம்ஸ்.. ஃபுல் மெனு இதோ!