MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Indian : இந்தியன் 2-வுக்கு முன் பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் ஆகும் இந்தியன் முதல் பாகம் - அதுவும் இந்த தேதியிலா?

Indian : இந்தியன் 2-வுக்கு முன் பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் ஆகும் இந்தியன் முதல் பாகம் - அதுவும் இந்த தேதியிலா?

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான இந்தியன் திரைப்படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : May 27 2024, 09:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Indian 2

Indian 2

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரும், நடிகர் கமல்ஹாசனும் முதன்முறையாக கூட்டணி அமைத்த படம் இந்தியன். கடந்த 1996-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டு பான் இந்தியா அளவில் ஹிட் அடித்தது. ஊழலை எதிர்க்கும் இந்தியன் தாத்தா கேரக்டரில் கமல்ஹாசன் தன்னுடைய மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார். ஏ.ஆர்.ரகுமானின் இசை அப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
kamal haasan, shankar

kamal haasan, shankar

இந்தியன் தாத்தா கேரக்டரில் தரமான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகர் கமல்ஹாசனுக்கு தேசிய விருதும் கிடைத்தது. இத்தகைய மாஸ் வெற்றியை பெற்று தமிழ் சினிமாவின் மாஸ்டர் பீஸ் படங்களின் பட்டியலில் இடம்பிடித்த இந்தியன், திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. இதிலும் கமல்ஹாசன் தான் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது. வருகிற ஜூலை 12-ந் தேதி இந்தியன் 2 திரைப்படம் திரைக்கு வர உள்ளது.

இதையும் படியுங்கள்... Indian 2 : அட்ரா சக்க.. இந்தியன் 2 படத்தின் கதை இதுதானா? பக்கா பிளானில் ஷங்கர் - வெளியான சுவாரசிய அப்டேட்!

34
Kamal Haasan Indian 2

Kamal Haasan Indian 2

இந்தியன் 2 திரைப்படத்தை லைகா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்து உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். அவரது இசையில் வெளிவந்த இப்படத்தின் முதல் பாடலான பாரா சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் அடுத்த மாதம் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்தியன் 2 படத்துக்கு முன்னர் இந்தியன் முதல் பாகம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

44
Indian Movie Re Release

Indian Movie Re Release

அதன்படி இந்தியன் திரைப்படம் வருகிற ஜூன் 7-ந் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். அண்மையில் ரீ-ரிலீஸ் ஆன விஜய்யின் கில்லி திரைப்படம் வசூல் சாதனை நிகழ்த்தியதை போல் இந்தியன் படமும் ரீ-ரிலீஸ் ஆகி வசூல் மழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படியுங்கள்... Sukanya : அவ என்னோட பொண்ணு இல்லைங்க... புது குண்டை தூக்கிப்போட்ட நடிகை சுகன்யா - அப்போ அந்த பெண் யார்?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இயக்குநர் ஷங்கர்
கமல்ஹாசன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved