- Home
- Gallery
- Sukanya : அவ என்னோட பொண்ணு இல்லைங்க... புது குண்டை தூக்கிப்போட்ட நடிகை சுகன்யா - அப்போ அந்த பெண் யார்?
Sukanya : அவ என்னோட பொண்ணு இல்லைங்க... புது குண்டை தூக்கிப்போட்ட நடிகை சுகன்யா - அப்போ அந்த பெண் யார்?
1990-களில் கோலிவுட்டில் டாப் ஹீரோயினாக கொடிகட்டிப் பறந்த நடிகை சுகன்யா, தனக்கு மகளே இல்லை என புது குண்டை தூக்கிப்போட்டு இருக்கிறார்.

Sukanya
1990-களில் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர் சுகன்யா. இவர் கடந்த 1991-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘புது நெல்லு புது நாத்து’ திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து விஜயகாந்த் ஜோடியாக அவர் நடித்த சின்ன கவுண்டர் திரைப்படம் சுகன்யாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு, நடிகை சுகன்யாவுக்கு ஏராளமான விருதுகளையும் வென்று கொடுத்தது.
Actress Sukanya
பின்னர் கோலிவுட்டில் பிசியான ஹீரோயினாக வலம் வந்த சுகன்யா, சத்யராஜ் ஜோடியாக திருமதி பழனிச்சாமி, வால்டர் வெற்றிவேல், பிரபு உடன் செந்தமிழ்ப் பாட்டு, கமலுடன் இந்தியன், மகாநதி என வரிசையாக ஹிட் படங்களில் நடித்த சுகன்யா, நடிகையாக மட்டுமின்றி டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி இருக்கிறார். மணிரத்னம் இயக்கிய மாஸ்டர் பீஸ் படமான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நடிகை நந்திதா தாஸுக்கு டப்பிங் பேசியது சுகன்யா தான்.
Sukanya photos
சினிமாவை போல் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து இல்லத்தரசிகளையும் கவர்ந்துள்ளார் சுகன்யா, குறிப்பாக சன் டிவியில் இவர் நடிப்பில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியல் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. நடிப்பு மட்டுமின்றி இசையிலும் ஆர்வம் கொண்ட சுகன்யா, ஒரு சில ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்தும் உள்ளார். அதேபோல் பரதநாட்டியத்திலும் சிறந்து விளங்கி உள்ளார். இப்படி பன்முகத்திறமை கொண்டவராக இருக்கும் சுகன்யா சில ஆண்டுகள் ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போனார்.
இதையும் படியுங்கள்... Director Surya Prakash : மாயி பட இயக்குனர் சூர்ய பிரகாஷ் காலமானார் - அதிர்ச்சியில் திரையுலகினர்
Sukanya divorce
இதையடுத்து தற்போது பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சக்தி ஐபிஎஸ்’ என்கிற சீரியலின் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார் சுகன்யா. சமீபத்தில் பேட்டியளித்த அவர் இணையத்தில் தனது மகளின் புகைப்படம் என குறிப்பிட்டு வைரலாகி வரும் போட்டோ குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
sukanya Family
அதில் அவர் பேசியதாவது : “நானும் அந்த போட்டோவை பார்த்தேன். அதில் இருப்பது என்னுடைய மகள் இல்லை. அது என் அக்கா மகள். நான் தான் அதை என் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டேன். அதிலும் என் அக்கா மகள் என்று தான் குறிப்பிட்டு இருந்தேன். ஆனால் அது என் மகள் என பரவி பெரியளவில் வைரல் ஆனது. என்னுடைய திருமணம் விவாகரத்தில் முடிந்தது அனைவருக்குமே தெரியும். ஸ்ரீதர் ராஜகோபால் உடன் விவாகரத்து பிரச்சனை பல வருடங்களாகவே ஓடிக்கொண்டு இருந்தது.
sukanya about Daughter Controversy
சில மாதங்கள் தான் நாங்கள் சேர்ந்து இருந்தோம். அதன்பின்னர் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் அப்ளை செய்துவிட்டேன். ஆனால் விவாகரத்து கிடைப்பதற்கு பல வருடங்கள் ஆகிவிட்டது. என் மகள் என பரப்பி வருகிறார்கள். வேண்டுமென்றே சுகன்யா பற்றி ஏதாவது பரப்ப வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறார்கள். நானும் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். என் அக்கா மகள் கூட இந்த செய்தியை பார்த்துவிட்டு, சித்தியால் நான் பேமஸ் ஆகிவிட்டேன் என ஜாலியா சொல்லிட்டு இருக்கா” என சுகன்யா கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... Kavin : படங்களை அடுக்கும் "ஸ்டார்".. SKவிற்கு மெகா ஹிட் கொடுத்த இயக்குனரோடு கைகோர்க்கும் கவின் - புது அப்டேட்!