MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கமல்ஹாசன் கைவிட்ட படத்தின் டைட்டிலை தட்டிதூக்க பிளான் போடும் ஹெச்.வினோத் - KH 233 பட தலைப்பு இதுவா?

கமல்ஹாசன் கைவிட்ட படத்தின் டைட்டிலை தட்டிதூக்க பிளான் போடும் ஹெச்.வினோத் - KH 233 பட தலைப்பு இதுவா?

ஹெச்.வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள புதிய படத்திற்காக கமல் நடித்து டிராப் ஆன படத்தின் டைட்டிலை தட்டிதூக்க பிளான் போட்டு வருகிறார்களாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 17 2023, 11:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
kamal, H Vinoth

kamal, H Vinoth

விக்ரம் படத்தின் அதிரிபுதிரியான வெற்றிக்கு பின்னர் நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் படு பிசியாகி உள்ளார். இவர் நடிப்பில் தற்போது இந்தியன் 2 திரைப்படம் தயாராகி வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது பின்னணி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர். இந்தியன் 2 படத்துக்கு பின்னர் தெலுங்கில் உருவாகும் கல்கி படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்கிறார் கமல்.

24
KH 233 movie

KH 233 movie

கல்கி திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங்கும் படு ஜோராக நடைபெற்று வருகிறது. இதுதவிர மேலும் இரண்டு படங்களையும் கைவசம் வைத்துள்ளார் கமல். அதில் ஒன்று ஹெச்.வினோத் இயக்கும் படம். இப்படத்தை கமல்ஹாசனே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார். இப்படத்திற்காக நடிகர் கமல்ஹாசன் பிரத்யேகமாக துப்பாக்கி சுடுதல் பயிற்சி எடுத்த வீடியோ அண்மையில் வெளியாகி வைரலானது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
kamal and Director H Vinoth

kamal and Director H Vinoth

இந்நிலையில், கமல்ஹாசன் - ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் குறித்த தகவல் தற்போது தீயாய் பரவி வருகிறது. அதன்படி இப்படத்திற்கு மர்மயோகி என டைட்டில் வைக்க திட்டமிட்டுள்ளாராம் ஹெச்.வினோத். ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு மர்மயோகி என்கிற பெயரில் ஒரு படம் உருவாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அப்படம் ஷூட்டிங் தொடங்கும் முன்பே டிராப் ஆனது.

44
KH 233 movie title

KH 233 movie title

மர்மயோகி என்கிற பெயரில் எம்ஜிஆர் நடித்த படம் ஒன்றும் உள்ளது. அந்த டைட்டில் உரிமையை கமல்ஹாசன் தன் படத்திற்காக ஏற்கனவே வாங்கி வைத்துள்ளதால், அதே தலைப்பை KH 233 படத்திற்கு வைக்க ஹெச்.வினோத் திட்டமிட்டுள்ளாராம். இதற்கு கமல்ஹாசன் ஓகே சொல்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... உலக நாயகனின் இந்தியன் 2.. சங்கர் போட்ட பக்கா பிளான் - அந்த மாஸ் ஹீரோ நச்சுனு ஒரு கேமியோ பண்ணப்போறாராம்?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கமல்ஹாசன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved