MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • June Month Horoscope: இந்த மாதம் ராசிபலன்..ஜூன் 1 முதல் 30 ஜூன் 2022 வரை, இந்த ராசிக்கு திடீர் பண மழை பொழியும்

June Month Horoscope: இந்த மாதம் ராசிபலன்..ஜூன் 1 முதல் 30 ஜூன் 2022 வரை, இந்த ராசிக்கு திடீர் பண மழை பொழியும்

Monthly Horoscope 2022 Rasipalan: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, கிரக நிலைகளின் அடிப்படையில், ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கும். இந்த 2022 ஆம் ஆண்டின் ஜூன் மாதம் முழுவதும் 12 ராசிகளின் பலன்கள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.   

4 Min read
Author : Anija Kannan
| Updated : Jun 01 2022, 09:16 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
Jothidar Chirag Daruwalla Astrology Prediction

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மேஷம்:

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம்கிரக நிலை சாதகமாக இருக்கும். பொருளாதார ரீதியான வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகள் கைகூடி வரும் யோகமுண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு யோகம் பிறக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்டுக் கொண்டிருந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றை சாதக பலன் உண்டு. பெண்களுக்கு புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். குழந்தைகளின் கல்வி விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.

212
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

ரிஷபம்: 

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்ட பலன்கள் கொடுக்கக்கூடிய நல்ல மாதமாக இருக்கிறது. பொருளாதாரம் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் குடும்ப தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள், புதிய மனிதர்களின் நட்பு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு  முன்னேற்றம் இருக்கும். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம்.

312
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மிதுனம்: 

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சிறப்பான பலன்கள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நிலுவையில் இருந்த பழைய பாக்கிகள் இம்மாதம் வசூலாகிவிடும்.உத்தியோகஸ்தர்களுக்கு வரக்கூடிய வருமானத்தைவிட செலவுகள் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. பெண்களுக்கு புதிய புரிதல் ஏற்படும். கணவன்-மனைவியிடையே பரஸ்பர அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள். 

412
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

கடகம்:

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் இனிய மாதமாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் மற்றவர்களுடைய தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே நட்பு மலரும். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும் என்பதால் சாதுரியமாக செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை தேவை. எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டுச் செய்வது நல்லது. அவசர முடிவுகள் ஆபத்தை ஏற்படுத்தும். பூர்வீக சொத்து பிரச்சினைகள் தீரும். 

512
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

சிம்மம்:

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த மாதமாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய முதலீடுகள் செய்வதில் கவனம் செலுத்துங்கள். பங்குதாரர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் கவனம் தேவை. பேச்சில் இனிமை இல்லை எனில் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டைகள் நிகழும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்கு உரிய ஊதியம் கிடைப்பதால் இடையூறுகள் ஏற்படலாம். பெண்களுக்கு தைரியம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியம் மேம்படும்.

612
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

கன்னி:

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் உங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவீர்கள். வருமானத்திற்கு மீறிய செலவுகள் ஏற்படும். இந்த மாதம் முழுவதும், ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் சுமுகமாகும். கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நிதி சார்ந்த நெருக்கடிகள் உண்டாகும். வம்பு வழக்குகளில் தேவையில்லாமல் மாட்டிக் கொள்ள நேரிடும் என்பதால் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது நல்லது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 

712
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

துலாம்: 

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கிறது. தடைப்பட்டுக் கொண்டிருந்த சுபகாரிய முயற்சிகளுக்கு தடை, தாமதங்கள் நீங்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுப செய்திகளை பெறுவீர்கள். வெளிநாடு, வெளியூர் தொடர்பான வேலை விஷயங்களில் சாதக பலன் உண்டு. சுய தொழில் புரிபவர்களுக்கு புதிய முதலீடுகள் செய்வதன் மூலம் முன்னேற்றம் நிச்சயம். வியாபாரத்தில் நாணயமாக நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் சூழ்நிலையை அறிந்து கொண்டு பேசுவது நல்லது. வீண் பழி சுமக்க நேரிடும் என்பதால் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மாணவர்கள் கல்வி விஷயத்தில் கூடுதல் அக்கறை தேவை. ஆரோக்கியம் மேம்படும்.

812
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

விருச்சிகம்: 

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் அனுகூலம் தரும் நல்ல அமைப்பாக இருக்கிறது. புதிய முயற்சிகளுக்கு, முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு சிறந்த மாதமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அறிவுத் திறனுக்கு ஏற்ப வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். அரசு வழி காரியங்கள் தாமதப்படும். பெண்கள் லட்சிய பாதையை நோக்கி பயணம் செய்வார்கள். புதிதாக செய்யக்கூடிய முதலீடுகளுக்கு நல்ல லாபம் காணும் யோகம் உண்டு. வழக்குகளில் சாதகமான முடிவுகள் வரும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். 

912
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

தனுசு:

தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் ஏற்ற, சிறப்பாக இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் முன்கூட்டியே கணிப்பதை தவிர்க்கவும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். கணவன் மனைவி பிரச்சனையில் மூன்றாம் மனிதர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மகான்களின் தரிசனம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கடின உழைப்பு, ஓய்வில்லாத அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. மாணவர்கள் கல்வியில் கூடுதல் ஆர்வத்தத்துடன் இருப்பார்கள். உணவு கட்டுப்பாட்டில் கவனம் செலுத்துவது ஆரோக்கியம் மேம்படும்.
 

1012
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மகரம்: 

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் உங்களுக்கு அற்புதமான மாதமாக அமைந்திருக்கிறது. உங்களுடைய விடாமுயற்சிக்கு உரிய வெற்றி கிடைக்கும். கிரக மாற்றங்களால் கெடு பலன்கள் ஏற்படுவதில் இருந்து தப்பித்துக் கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்று விடும். வாகன ரீதியான பயணங்களின் பொழுது எச்சரிக்கையுடன் செல்லுங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு நிர்வாகத்தின் நம்பிக்கையைப் பெறும் யோகமுண்டு.

1112
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

கும்பம்: 

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் இனிய மாதமாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து நடந்து கொள்வீர்கள். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருக்கும் பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்வீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியிடங்களில் சிறுசிறு சண்டை, சச்சரவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. பேச்சில் இனிமை இருந்தால் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். பிள்ளைகளுடைய கல்வி விஷயத்தில் அக்கறை கொள்ளுங்கள். 

1212
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மீனம்: 

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் முக்கியமான பல நல்ல விஷயங்களை கேட்டு இருக்கிறீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் சாதக பலன் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். நீங்கள் தொட்டதெல்லாம் ஜெயம் காணும் யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண ரீதியான விஷயத்தில் லாபம் உண்டாகும். வேலைவாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பிள்ளைகள் கவனம் சிதறாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள். 

மேலும் படிக்க.....Weekly Horoscope: இந்த வார ராசிபலன்...இன்று முதல் 5 ஜூன் 2022 வரை, இந்த ஐந்து ராசிகளுக்கு மட்டும் கஜகேசரி யோகம

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved