- Home
- Gallery
- Madurai Muthu: இரண்டாவது மனைவி நீத்துவை விவாகரத்து செய்கிறாரா மதுரை முத்து! அவர் மனைவி போட்ட அதிர்ச்சி பதிவு!
Madurai Muthu: இரண்டாவது மனைவி நீத்துவை விவாகரத்து செய்கிறாரா மதுரை முத்து! அவர் மனைவி போட்ட அதிர்ச்சி பதிவு!
ஸ்டாண்ட் அப் காமெடி மூலம் பிரபலமான, மதுரை முத்துவின் மனைவி நீத்து இன்ஸ்டாகிராம் போட்டுள்ள பதிவால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிகிறார்களா? என்கிற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

பல வெள்ளித்திரை வாய்ப்புகள் வந்த போதும் அதனை ஏற்காமல், தொடர்ந்து சின்னத்திரையில் பல வருடங்களாக நகைச்சுவை மன்னனாக கலக்கிக் கொண்டிருப்பவர் மதுரை முத்து. ஸ்டாண்ட் அப் காமெடி செய்வதில் கில்லாடியான இவர், கலக்க போவது யாரு, அசத்த போவது யாரு, போன்ற நிகழ்ச்சிகளை தாண்டி, விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் குக்காக இருந்து பின்னர் கோமாளியாக மாறியவர்.
நகைச்சுவை மூலம் பலரை சிரிக்க வைத்த மதுரை முத்துவின் வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாத ஒன்றே. இவர் லேகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் மூலம் இரண்டு பெண் குழந்தைகள் மதுரை முத்துவுக்கு பிறக்க, தன்னுடைய குடும்பத்துடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு, மதுரையில் இருந்து சென்னை திரும்பி கொண்டிருந்த மதுரை முத்துவின் மனைவி லேகா வந்த கார் விபத்தில் சிக்கிய நிலையில், சம்பவ இடத்திலேயே லேகா உயிரிழந்தார். மனைவியின் மறைவுக்கு பின் திருமணமே வேண்டாம் என மதுரை முத்து இருந்தாலும், குழந்தைகளுக்காக இரண்டாவது திருமணம் செய்துகொள்ள நேர்ந்தது.
மதுரை முத்து லேகாவின் நெருங்கிய தோழியான நீத்து என்கிற பல் மருத்துவரை தான் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் நீத்து மூலம் மதுரை முத்துவுக்கு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது.
ஆனந்த் அம்பானியை விட... வயதில் மூத்தவரா ராதிகா மெர்ச்சண்ட்? எத்தனை வயசு வித்தியாசம் தெரியுமா?
Madurai muthu
இரண்டு மகள், மகன், மனைவி என மதுரை முத்து... அண்மையில் கட்டி குடியேறிய பிரமாண்ட வீட்டில் வசித்து வந்தார். இதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகி வைரலானதோடு பலர் தங்களின் வாழ்த்துக்களை மதுரை முத்து குடும்பத்துக்கு தெரிவித்து வந்தனர்.
Madurai muthu
இந்நிலையில் நீத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தெடர்ந்து சோகமான பதிவுகளையே வெளியிட்டு வருகிறார். குறிப்பாக, தற்போது நீத்து வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோவில் "எனக்கு என்று ஒரு உயிர் வேண்டும், அது என்னை மட்டுமே நேசிக்க வேண்டும். அவருக்காகவே நான் பொட்டு வைத்து சந்தோஷமாக இருக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு முறையும் நான் ஏமாந்து போய்க்கொண்டே இருக்கிறேன் என்று கண்ணீருடன் பதிவிட்டிருந்தார்.
இவரின் இந்த பதிவு தான் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மதுரை முத்துவின் மனைவி நீத்து அவரிடம் இருந்து பிரிந்து வாழ்கிறாரா என்றும், இருவரும் விவாகரத்து பெற போகிறார்களா? என்றும் பலர் தொடர்ந்து எழுப்பி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.