Premgi Marriage: எனக்கு 44 உனக்கு 24! 20 வயது வித்தியாசத்தில் காதலியை கரம் பிடிக்கும் பிரேம்ஜி! காதலி இவரா?
நடிகர் பிரேம்ஜி, இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள உள்ளதாக... எக்ஸ் தளத்தில் அறிவித்த நிலையில், இவரின் காதலி யார்? என்பது பற்றி பல தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர், இயக்குனர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முக திறமையாளராக அறியப்படும், கங்கை அமரனின் இளைய மகன் தான் பிரேம்ஜி. இவரது மகன்களான வெங்கட் பிரபு, திரையுலகில் ஒரு நடிகராக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார்.
Venkat Prabhu
இவர் இயக்கத்தில், சிம்பு நடித்த மாநாடு படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி... படுதோல்வியை தழுவினாலும், தன்னுடைய அடுத்த படமாக தளபதியின் 68-ஆவது படமாக உருவாகும் 'GOAT' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது, ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியாகி... சமூக வலைத்தளத்தில் தளபதி ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டது.
இந்நிலையில், நடிகர் பிரேம்ஜி... இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள உள்ளதாக, புத்தாண்டை முன்னிட்டு அறிவித்த தகவலை தொடர்ந்து ரசிகர்கள் பலர், தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். மேலும் பிரேம்ஜி தன்னுடைய 44 வயதில் திருமணம் செய்து கொள்ளவுள்ள அந்த பெண் யார் என்பது தான் ரசிகர்களின் முக முக்கிய கேள்வியாக மாறியுள்ளது.
இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில்... பிரேம்ஜி கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும் அந்த பெண்ணுடன் தான் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. அந்த பெண்ணுக்கும்.. பிரேம்ஜிக்கும் சுமார் 20 வயது வித்தியாசமாம்.
இப்படி ஒரு தகவல் தீயாக பரவி வந்தாலும், இன்னும் சிலர்... கடந்த ஆண்டு பிரேம்ஜி-யை கட்டிப்பிடித்தபடி எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு என் புருஷனுடன் மீண்டும் சேர்ந்துவிட்டேன் என பின்னணி பாடகி வினைதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்ததால், அவரை தான் பிரேம்ஜி திருமணம் செய்ய உள்ளாரா என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
எது எப்படி இருந்தாலும்... கத்திரிக்காய் முத்துனா கடைக்கு வந்து தான் ஆகணும் என்கிற பழமொழிக்கு ஏற்ப, திருமண ஏற்பாடு செய்துவிட்டால் பெண் யார் என்கிற தகவல் தன்னால வெளியாகும் !! அதுவரை கார்த்திருப்போம்!!