Divyabharathi: வழவழன்னு இருக்கும் கவர்ச்சி உடையில்... பளபளக்கும் மேனியை காட்டிய திவ்யா பாரதி! ஹாட் போட்டோஸ்!
ஃபோண்டா பாட்டில் அழகி, என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஒரு சில நடிகைகள் மட்டுமே ஒரே படத்தில் நடித்திருந்தாலும், ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்து விடுகிறார்கள். அந்த வகையில் 'பேச்சுலர்' படத்தின் மூலம் அறிமுகமான திவ்யபாரதியும் ஒருவர்.
இயக்குனர் செல்வகுமார் இயக்கிய வெளியான 'பேச்சுலர்' படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் திவ்ய பாரதி. முதல் படத்திலேயே திறமையை வெளிப்படுத்தியது மட்டும் இன்றி, ரொமான்டிக் காட்சியிலும் பட்டையை கிளப்பினார்.
இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் திவ்யபாரதி, தற்போது 'மதில்மேல் காதல்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். முகென் ராவ் ஹீரோவாக நடித்து வரும் இந்த படத்தை, வெப்பம் பட இயக்குனர் அஞ்சனா இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங், மற்றும் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் அனைத்தும் முடிவடைந்து... ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என தெரிகிறது.
இதுதவிர இயக்குனர் சேரன் இயக்கத்தில் ஒரு வெப் தொடரிலும் நடித்து வரும் திவ்ய பாரதி. அதே போல் ஆசை என்கிற படத்திலும் ஹீரோயினாக நடித்து முடித்துள்ளார். இது மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற இஸ்க் படத்தின் தமிழ் ரீமேகாக உருவாகியுள்ளது. இப்படத்தில் நடிகர் கதிருக்கு ஜோடியாக திவ்ய பாரதி நடித்துள்ளார்.
அம்மணியின் கைசவமும் ஏராளமான படங்கள் குவிந்து வருகிறது. நடிப்பில் ஒருபக்கம் பிசியாக இருந்தாலும், மற்றொருபுறம்... இன்ஸ்டாகிராமில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது மெரும் கலர் வழவழப்பான உடையில்.. பளபளக்கும் மேனியின் அழகை காட்டி இளம் நெஞ்சங்களை உசுப்பேற்றியுள்ளார். இந்த போட்டோஸ் தற்போது படு வைரலாக பார்க்கப்பட்டு, புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.