இந்தியன் 3க்கு கால்ஷீட் கொடுத்தாச்சு.. இளசுகளுக்கு வலுப்போட்டியாக மாறிய கமல் - அவர் Lineupல் இத்தனை படங்களா?
Kamalhaasan Movies : தமிழ் சினிமா என்பதை தாண்டி உலக சினிமா தளத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு மாபெரும் கலைஞன் தான் கமல்ஹாசன். திரைத்துறையில் இவர் ஏற்று செயல்படாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இவர் ஒரு ஜாம்பவான்.
kamal and rajini
எம்ஜிஆர், சிவாஜி கணேசன் என்கின்ற இரு மாபெரும் நடிகர்களுடைய காலத்திற்கு பிறகு சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக விளங்கி வரும் இரு நடிகர்கள் தான் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த். இவர்கள் இருவரும் இன்றளவும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக தங்களுடைய படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் ஒரு மாபெரும் வசூல் சாதனையை படைத்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இளம் ஹீரோக்களுக்கு இணையாக தனது லயனப்பில் பல திரைப்படங்களை அடுக்கிக் கொண்டே போகிறார் கமல்ஹாசன் என்றே கூறலாம்.
Indian 2
ஏற்கனவே சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில், சுமார் 35 நாட்கள் கால் சீட்டை இந்தியன் 3 திரைப்படத்திற்காக கமல்ஹாசன் கொடுத்துள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது.
Director Vinoth
மேலும் வருகின்ற 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கமல்ஹாசன் தனது 233வது திரைப்பட பணிகளை துவங்குவார். இந்த திரைப்படம் ஹச். வினோத் இயக்கத்தில் உருவாக உள்ளது அனைவரும் அறிந்ததே.
Kalki
அதேபோல வினோத் திரைப்பட பணிகளை துவங்குவதற்கு முன்பாகவே நாக அஸ்வின் இயக்கத்தில் அமிதாபச்சன், பிரபாஸ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் "கல்கி" திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று கமல்ஹாசன் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Thug Life
அதனைத் தொடர்ந்து சுமார் 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் மணிரத்தினதின் இயக்கத்தில் உருவாகவுள்ள "தக் லைஃப்" திரைப்படத்தில் கமலஹாசன் நடிக்க உள்ளார். ஏற்கனவே இந்த திரைப்படம் குறித்த அப்டேட்டுகள் வெளியானது.
Vikram 2
அதேபோல இந்த திரைப்பட பணிகளை எல்லாம் முடித்துவிட்டு மீண்டும் லோக்கேஷன் சினிமாடிக் யூனிவெர்சுக்குள் வரவிருக்கும் விக்ரம் 2 பட பணிகளை கமல்ஹாசன் துவங்க உள்ளார். இப்படி இளம் ஹீரோக்களுக்கு இணையாக கமல்ஹாசன் அவர்களும் பல திரைப்படங்களை தொடர்ச்சியாக தனது லைனில் வைத்திருப்பது அவருடைய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.