MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
House Construction Cost Ideas
OTT Release This Week
DA Hike
Moon Transit in Scorpio
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Gallery
  • கடல் தாண்டி சென்று காதலிக்கும் பிரியா பவானி சங்கர்... வெளிநாட்டில் லவ்வர் உடன் எடுத்த ரொமாண்டிக் போட்டோஸ் இதோ

கடல் தாண்டி சென்று காதலிக்கும் பிரியா பவானி சங்கர்... வெளிநாட்டில் லவ்வர் உடன் எடுத்த ரொமாண்டிக் போட்டோஸ் இதோ

காதலனுடன் வெளிநாட்டில் அவுட்டிங் சென்றபோது எடுத்த ரொமாண்டிக் புகைப்படங்களை நடிகை பிரியா பவானி சங்கர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 03 2024, 12:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் நடிகை ஆனவர் பிரியா பவானி சங்கர். ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்கிற சீரியலில் ஹீரோயினாக நடித்த அவர், அந்த சீரியல் ஹிட்டானதை தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

அந்த வகையில் அவர் ஹீரோயினாக நடித்த முதல் படம் மேயாத மான். அப்படத்தில் நடிகர் வைபவ்விற்கு ஜோடியாக நடித்தார் பிரியா பவானி சங்கர். அப்படமும் ஹிட் ஆனது. இதையடுத்து கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்தார் பிரியா.

37

பின்னர் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக மான்ஸ்டர், அருண் விஜய் ஜோடியாக மாஃபியா, ஹரிஷ் கல்யாண் உடன் ஓ மணப்பெண்ணே, தனுஷின் திருச்சிற்றம்பலம், சிம்பு உடன் பத்து தல என தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து பேமஸ் ஆனார் பிரியா பவானி சங்கர்.

இதையும் படியுங்கள்... சில்க் ஸ்மிதா கிளாமராக நடித்தாலும்... நிஜத்தில் அவர் இப்படிபட்டவர் தான் - நடிகர் மோகன் பகிர்ந்த சீக்ரெட்

47

தற்போது நடிகை பிரியா பவானி சங்கர் கைவசம் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2, அஜய் ஞானமுத்து இயக்கிய டிமாண்டி காலனி 2 போன்ற படங்கள் உள்ளன. இதில் இந்தியன் 2 திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 13-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

57

தற்போது ஷூட்டிங்கில் இருந்து பிரேக் எடுத்துள்ள பிரியா பவானி சங்கர் தன்னுடைய காதலனை பார்ப்பதற்காக ஆஸ்திரேலியா சென்றிருக்கிறார். அங்குள்ள சிட்னி நகரில் இருவரும் ஜோடியாக ஊர் சுற்றியபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

67

நடிகை பிரியா பவானி சங்கர் ராஜவேலு என்பவரை தன்னுடைய கல்லூரி காலத்தில் இருந்து காதலித்து வருகிறார். திருமணத்துக்கு முன்பே காதலனுடன் அவுட்டிங் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் பிரியா பவானி சங்கர், தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

77

அங்கு எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ள அவர், சிட்னி தனக்கு இரண்டாவது வீடு போன்றது என்றும், இதுவரை பலமுறை அங்கு சென்றிருந்தாலும் இம்முறை தனக்கு அந்நகரம் மிகவும் அழகாக தெரிந்ததாகவும் அதற்கு காரணம் தனது காதலன் தான் என பதிவிட்டு இருக்கிறார் பிரியா.

இதையும் படியுங்கள்... கூல்ட்ரிங்க்ஸ் மயக்க மருந்து கொடுத்து என்ன ரேப் பண்ணது மட்டுமல்ல! கதறிய இளம்பெண்! தயாரிப்பாளரை தூக்கிய போலீஸ்!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved