- Home
- Gallery
- சில்க் ஸ்மிதா கிளாமராக நடித்தாலும்... நிஜத்தில் அவர் இப்படிபட்டவர் தான் - நடிகர் மோகன் பகிர்ந்த சீக்ரெட்
சில்க் ஸ்மிதா கிளாமராக நடித்தாலும்... நிஜத்தில் அவர் இப்படிபட்டவர் தான் - நடிகர் மோகன் பகிர்ந்த சீக்ரெட்
நடிகை சில்க் ஸ்மிதா பற்றியும் அவருடனான நட்பு பற்றியும் நடிகர் மோகன் சமீபத்திய பேட்டியில் மனம்விட்டு பேசி இருக்கிறார்.

mike mohan
1980-களில் டாப் ஹீரோவாக கொடிகட்டிப் பறந்தவர் தான் மோகன். 1980-ம் ஆண்டு வெளிவந்த மூடுபனி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான மோகன், 10 ஆண்டுகள் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பல திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். அந்த காலகட்டத்தில் ரஜினி, கமலுக்கு செம்ம டஃப் கொடுக்கும் வகையில் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டு வந்தது மோகன் நடித்த படங்கள்.
Actor Mohan
அதுமட்டுமின்றி கிசுகிசுக்களில் சிக்காத ஒரு ஹீரோவாகவும் மோகன் வலம் வந்தார். 1990-க்கு பின் சினிமாவில் இருந்து விலகிய மோகன், தயாரிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார். சின்னத்திரை சீரியல்களை தயாரித்து வந்த அவர், பல்வேறு முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க வந்த வாய்ப்பையும் நிராகரித்துவிட்டார். அந்த வகையில் உனக்கும் எனக்கும் திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி தந்தையாக முதலில் நடிக்க அணுகியது மோகனை தானாம். ஆனால் அவர் நடிக்க மறுத்ததால் அவருக்கு பதில் பாக்கியராஜ் அந்த ரோலில் நடித்தார்.
இதையும் படியுங்கள்... கருவிலேயே கலைக்க நினைத்த பெற்றோர்; ஹீரோயின் மூஞ்சே இல்ல! பல தடைகளை தாண்டி சாதித்த இந்த குழந்தை யார் தெரிகிறதா?
Mohan Haraa Movie
பின்னர் சுட்டபழம் என்கிற படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க நினைத்த மோகனுக்கு அப்படமும் பிளாப் ஆனதால், கடந்த 15 ஆண்டுகளாக சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்து வந்தார். இந்த நிலையில், தற்போது மீண்டும் பிசியாகி உள்ள மோகன், ஹரா மற்றும் விஜய்யுடன் கோட் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் அவர் ஹீரோவாக நடித்துள்ள ஹரா படம் வருகிற ஜூன் 7-ந் தேதி திரைக்கு வர உள்ளது. அப்படத்தின் புரமோஷனுக்காக பல்வேறு பேட்டிகளும் அளித்து வருகிறார் மோகன்.
Mohan, silk smitha
அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை சில்க் ஸ்மிதா குறித்து பேசி இருக்கிறார் மோகன். அதில் அவர் கூறியதாவது : “சில்க் ஸ்மிதா படங்களில் கிளாமராக நடித்தாலும் நிஜத்தில் ரொம்ப நல்லவர். எனக்கும் அவரை நன்றாக தெரியும், அவரது நடிப்பை பார்த்து வியந்திருக்கிறேன். சில்க் ஸ்மிதா ஷூட்டிங் என்றாலே ரசிகர்களை போல் தயாரிப்பாளர்களும் பைனான்சியர்களும் காத்துக்கிடப்பார்கள். ஆனால் எந்த இடத்திலும் அலட்டிக்காமல் சாதாரணமா இருப்பார். அவர் இப்போது நம்முடன் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என மோகன் எமோஷனலாக பேசி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... கூல்ட்ரிங்க்ஸ் மயக்க மருந்து கொடுத்து என்ன ரேப் பண்ணிட்டாரு! அது மட்டும் அல்ல! தயாரிப்பாளர் தூக்கிய போலீஸ்!