- Home
- Gallery
- கூல்ட்ரிங்க்ஸ் மயக்க மருந்து கொடுத்து என்ன ரேப் பண்ணது மட்டுமல்ல! கதறிய இளம்பெண்! தயாரிப்பாளரை தூக்கிய போலீஸ்!
கூல்ட்ரிங்க்ஸ் மயக்க மருந்து கொடுத்து என்ன ரேப் பண்ணது மட்டுமல்ல! கதறிய இளம்பெண்! தயாரிப்பாளரை தூக்கிய போலீஸ்!
குளிர்பானத்தில் மயக்க மாத்திரை கலந்து கொடுத்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்தது மட்டுமல்லாமல் கருவை கலைத்த சினிமா தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Film Producer
சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் முகமது அலி (30). சினிமா தயாரிப்பாளர். இவர் கீழ்அயனம்பாக்கத்தில் சினிமா பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த அலுவலகத்தில் கொரட்டூர் பகுதியை சேர்ந்த 28 வயது இளம்பெண் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
Rape Case
இந்நிலையில், கடந்த மே மாதம் 13ம் தேதி அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இளம்பெண் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், சினிமா பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் முகமது அலி தனக்கு திருமணம் ஆனதை மறைத்து என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறிவந்துள்ளார். எனக்கு தெரியாமல் குளிர்பானத்தில் மயக்க மாத்திரைகள் கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செயதுள்ளார். அதுமட்டுமல்லாமல் அதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.
sexual harassment
இதனால் நான் கர்ப்பமடைந்த நிலையில், சத்து மாத்திரை என கூறி கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி கொடுத்து கருவை கலைத்தார். இந்த வவிகாரம் குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவாக மிரட்டியுள்ளார். பணம் பறிப்பிலும் ஈடுபட்டுள்ளார். எனவே, அவரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் புகாரில் கூறியிருந்தார். இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் குற்றச்சாட்டு நிரூபணமானது.
Police Arrest
இதையடுத்து சினிமா தயாரிப்பாளரான முகமது அலி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.