MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அண்ணியை மடக்கிய கொழுந்தன்.. ரூட் மாறியதால் ரோட்டிலே வைத்து என்ன செய்தார் தெரியுமா?

அண்ணியை மடக்கிய கொழுந்தன்.. ரூட் மாறியதால் ரோட்டிலே வைத்து என்ன செய்தார் தெரியுமா?

தூத்துக்குடி அருகே பேருந்துக்காக காத்திருந்த பெண் ஒருவர் அவரது மகளின் முன்பே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min read
Author : vinoth kumar
Published : Mar 15 2024, 04:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Thoothukudi

Thoothukudi

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம்  அடுத்துள்ள எப்போதும் வென்றான் கீழத்தெருவை சேர்ந்தவர் வைரமுத்து. இவரது மனைவி சின்னமணி(35). இவர் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் வைரமுத்து உயிரிழந்துவிட்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். 

24
Crime news

Crime news

கணவர் உயிரிழந்த பின்னர் தனது பிள்ளைகளுடன் தூத்துக்குடி அருகே உள்ள புதுப்பேட்டை பகுதியில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், தற்போது வசித்திருக்கும் பகுதிக்கு ரேஷன் அட்டையை மாற்றாததால், தனது சொந்த ஊருக்கு மகளுடன் பேருந்தில் வந்து ரேஷன் பொருட்களை வாங்கியுள்ளார். மீண்டும் தான் வசிக்கும் புதுப்பேட்டை பகுதிக்கு செல்ல மகளுடன் பேருந்து நிலையத்தில் சின்னமணி காத்திருந்தார். 

34
Women Murder

Women Murder

அப்போது அங்கு வந்த வைரமுத்துவின் தம்பியான ராஜேஷ் கண்ணன் (20)  சின்னமணியிடம் தகராறில் ஈடுபட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து ஆத்திரமடைந்த ராஜேஷ் கண்ணன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அண்ணி என்று கூட பாராமல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தார். மகள் கண்முன்னே தாய் கொலை செய்யப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்து அழுது கதறினார். 

44
illegal love

illegal love

பின்னர் நடந்த சம்பவத்தை கூறி எப்போதும் வென்றான் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சின்னமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், கணவர் இறந்தவுடன் அவரது தம்பியான ராஜேஷ் கண்ணனுடன் தொடர்பில் இருந்த சின்னமணிக்கு, வேறு சில ஆண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை ராஜேஷ் கண்ணன் கண்டித்தும் அவர் கண்டுகொள்ளாததால், ஆத்திரத்தில் அவரை வெட்டிக்கொன்றதும் தெரியவந்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved