MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அஜினோமோட்டோ உண்மையில் விஷமா..? இதனால் வரும் பிரச்சினைகள் பற்றி தெரியுமா..?

அஜினோமோட்டோ உண்மையில் விஷமா..? இதனால் வரும் பிரச்சினைகள் பற்றி தெரியுமா..?

நம்முடைய ஆரோக்கியம் முற்றிலும் நாம் சாப்பிடும் உணவை பொறுத்தது தான். எனவே, இன்று இக்கட்டுரையில் அஜினோமோட்டோவால் ஏற்படும் தீமைகளை பற்றி தெரிந்துகொள்வோம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : May 28 2024, 01:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

நவீன வாழ்க்கை முறையில், நாம் குப்பை உணவுகளை தான் அதிகம் சாப்பிடுகிறோம். அதிலும் குறிப்பாக, பேக்கேஜ்கள் மற்றும் ஜங்க் ஃபுட்களில் அஜின்மோட்டோ தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த அஜினோமோட்டோ ஒரு வகையான உப்பு ஆகும். மேலும், இது உணவின் சுவையை அதிகரிக்கச் செய்கிறது. 

28

அஜினோமோட்டோ என்றால் என்ன?: அஜினோமோட்டோ என்பது ஒரு வகை ரசாயனம் ஆகும். இது MSG என்றும் அழைக்கப்படுகிறது. MSG என்பது மோனோ சோடியம் குளுமேட் ஆகும். இது புரதத்தின் ஒரு பகுதியாகும். மேலும், இது அமினோ அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது. அஜினோமோட்டோ 1909 ஆம் ஆண்டு ஜப்பானிய விஞ்ஞானி கிகுனாவோ அகேடாவால் கண்டுபிடிக்கப்பட்டது. 

38

அஜினோமோட்டோ எந்த வகையான உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது?: நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ் மற்றும் மஞ்சூரியன், சூப் உணவுகள் போன்ற பெரும்பாலான சீன உணவுகளில் தான் அஜினோமோட்டோ பயன்படுத்தப்படுகிறது. அதுபோல, இது, பீட்சா, பர்கர், மேகி மசாலா பொருட்களிலும்,  ஜங்க் ஃபுட் களிலும், தக்காளி சாஸ், சோயா சாஸ் போன்றவற்றிலும், சிப்ஸ் போன்ற உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இப்போது, அஜின்மோட்டோ சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன..? அதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

48

நரம்பு மண்டலத்தை பாதிக்கும்: சீன உணவில் பயன்படுத்தப்படும் அஜினோமோட்டோ, நரம்பு மண்டலத்தை பெரிதும் பாதிக்கிறது.  இதில் உள்ள குளுடாமிக் அமிலம் மூளையில் உள்ள நரம்பியக்கடத்தியாக செயல்படுகிறது. இது உடலில் அதிகமாக இருந்தால், அது மூளைக்கு அபாயத்தை ஏற்படுத்தும்.

58

எடையை அதிகரிக்கும்: இன்று பெரும்பாலானோர் ஜங்க் ஃபுட்களை விரும்பி சாப்பிடுகின்றனர். இரண்டாவது விஷயம் இன்று உணவு பழக்கம் சீரழிந்துவிட்டது. நொறுக்கு தீனிகளின் சுவையை அதிகரிக்க அஜினோமோட்டோ பயன்படுத்தப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், அஜினோமோட்டோ உங்கள் பசியை அதிகரிக்கச் செய்யும். இதனால் நீங்கள் மீண்டும் மீண்டும் சாப்பிடுவதினால் உடல் பருமனாகும்.

68

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆபத்து: கர்ப்பிணிப் பெண்கள் சீன உணவுகளை ஒருபோதும் சாப்பிட வேண்டாம். இதற்கு முக்கிய காரணம் அஜினோமோட்டோ. ஏனெனில், இதில்  அதிக சோடியம் உள்ளது. கர்ப்ப காலத்தில் சோடியம் அதிகமாக சாப்பிடுவது வீக்கம் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. இது குழந்தையையும் பாதிக்கும்.

இதையும் படிங்க:  தப்பி தவறி கூட "இந்த" மாதிரி உணவுகளை சாப்பிடாதீங்க.. மனநலம் பாதிக்கப்படும்.. ஆய்வில் திடுக்கிடும் தகவல்!!

78

உயர் இரத்த அழுத்த பிரச்சனை: சீன உணவில் உள்ள அஜினோமோட்டோ இரத்த அழுத்த பிரச்சனையை உண்டாக்கும். ஒருவேளை, நீங்கள் ஏற்கனவே இரத்த அழுத்த நோயாளியாக இருந்தால், அஜினோமோட்டோ உணவை சாப்பிட வேண்டாம். இதன் காரணமாக, இரத்த அழுத்த பிரச்சனை மேலும் அதிகரிக்கும்.

இதையும் படிங்க: மறந்து கூட நைட் டைம்ல இந்த காய்கறிகளை சாப்பிடாதீங்க! காரணம் தெரியுமா..?

 

88

தூக்கமின்மை மற்றும் ஒற்றைத் தலைவலி: உங்களுக்கு தூக்கம் மற்றும் ஒற்றைத் தலைவலி தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், அதற்கு அஜினோமோட்டோவும் ஒரு முக்கிய காரணம் என்றே சொல்லலாம். இது தூக்கமின்மை மற்றும் உற்ற தலைவலியை ஏற்படுத்தும். மேலும், அஜினோமோட்டோ உணவை சாப்பிடுவதால் நாள் முழுவதும் சோர்வாக இருப்பீர்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved