அம்பானியின் ஆடம்பர மால் திறப்பு விழா! டார்லிங்ஸோடு வந்து கலந்துகொண்ட கோலிவுட் நடிகைகளின் கியூட் கிளிக்ஸ் இதோ
அம்பானியின் ஜியோ வேர்ல்டு பிளாசா திறப்பு விழாவில் நடிகைகள் காஜல் அகர்வால், ஹன்சிகா, சுருதிஹாசன் ஆகியோர் ஜோடியோடு வந்து கலந்துகொண்டனர்.
jio world plaza Launch
ஜியோ வேர்ல்டு பிளாசா என்கிற பெயரில் மும்பையில் மிகப்பெரிய மால் ஒன்றை அம்பானி திறந்துள்ளார். இதன் திறப்பு விழா நேற்று மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஏராளமான திரையுலக பிரபலங்கள் படையெடுத்து வந்து கலந்துகொண்டனர்.
Hansika at jio world plaza
அம்பானியின் ஆடம்பர மால் ஓப்பனிங்கிற்கு நடிகை ஹன்சிகா தனது காதல் கணவர் சோஹைல் கத்தூரியா உடன் வந்து கலந்துகொண்டார். அப்போது இருவரும் ஜோடியாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
Hansika with her husband
ஹன்சிகா மற்றும் சோஹைல் கத்தூரியா இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் நடைபெற்றது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
kajal agarwal at jio world plaza
நடிகை காஜல் அகர்வாலும் தன்னுடைய கணவர் கவுதம் கிச்சிலு உடன் அம்பானி மால் ஓப்பனிங்கில் கலந்துகொண்டார். அப்போது இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது.
kalaj agarwal and gautham kitchlu
காஜல் அகர்வாலும், கவுதம் கிச்சிலுவும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த ஜோடிக்கு நீல் கிச்சிலு என்கிற அழகான ஆண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
shruti haasan at jio world plaza
நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனும் அம்பானியின் பிரம்மாண்ட மால் ஒப்பனிங்கில் கலந்துகொண்டார். அவர் தன்னுடைய காதலன் சாந்தனுவுடன் ஜோடியாக வந்திருந்தபோது எடுத்த ரொமாண்டிக் கிளிக்ஸ் இது.
shruti haasan and shantanu
நடிகை ஸ்ருதிஹாசனும், சாந்தனுவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இருவரும் தற்போது லிவ்விங் டுகெதராக மும்பையில் ஒன்றாக வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... அம்பானியின் மால் ஓப்பனிங்.. டூபீஸ் உடையில் காதலனுடன் கவர்ச்சி புயலாக வந்திறங்கிய தமன்னாவின் கார்ஜியஸ் கிளிக்ஸ்