நடிகர் பிரசாந்தை உதறிவிட்டு சென்ற மனைவி கிரஹலட்சுமி - தியாகராஜன் தான் காரணமா?
Top Star Prashanth : பிரபல நடிகர் பிரஷாந்த் நடிப்பில் அண்மையில் வெளியான அந்தகன் திரைப்படம் பெரிய அளவில் வசூல் சாதனை படைத்து வருகின்றது.
Top Star Prashanth
தல தளபதி என்று ரசிகர்கள் மத்தியில் இப்பொது உள்ள மோதல் போக்கு சினிமா உலகத்தில் நிலவுவதற்கு முன்பாகவே, டாப் ஸ்டார் என்ற பட்டத்தோடு கோலிவுட் உலகில் மிகப்பெரிய நாயகனாக வலம் வந்தவர் தான் பிரஷாந்த். நடனம், சண்டை பயிற்சி, குதிரையேற்றம் என்று அனைத்தையும் முறையாக கற்று சினிமா உலகுக்குள் நுழைந்த ஒரு நேர்த்தியான நடிகர் அவர்.
Aadudam Andhra: ஆடுதாம் ஆந்திரா; ஊழல் புகாரில் சிக்கும் நடிகை ரோஜா?
Jeans Movie
கடந்த 1990ம் ஆண்டு வெளியான "வைகாசி பொறந்தாச்சு" என்கின்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு உள்ளட பல மொழிகளில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான ஆணழகன், ஜீன்ஸ், ஜோடி, ஹலோ, பார்த்தேன் ரசித்தேன் மற்றும் தமிழ் போன்ற திரைப்படங்கள் மெகா ஹிட் திரைப்படங்களாக மாறியது அனைவரும் அறிந்ததே.
Prashanth Marriage
இப்படி திரைத்துறையில் பெரிய அளவில் சாதனைகளை படைத்து வந்த நடிகர் பிரசாந்த், திருமண வாழ்க்கையில் நன்கு வாழ வேண்டும் என்பதற்காக அவருக்கு கிரகலட்சுமி என்கின்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார் அவரது தந்தை தியாகராஜன். ஆனால் கடந்த 2005ம் ஆண்டு அவர்களுக்கு திருமணமான ஒரு சில நாட்களுக்கு பிறகு தான், அந்த பெண் ஏற்கனவே மனமானவர் என்பது பிரஷாந்த் மற்றும் அவரது தந்தைக்கு தெரியவந்துள்ளது.
Veteran Actor Prashanth
இதுகுறித்து அண்மையில் ஒரு பேட்டியில் பேசிய பிரசாந்தின் தந்தை தியாகராஜன், "மணமாகி வெறும் 45 நாட்கள் மட்டுமே வாழ்ந்த நிலையில், அந்த பெண் எங்கள் வீட்டை விட்டு வெளியேறினார். வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு, நாங்கள் அவரை வரதட்சனை கேட்பதாக எங்கள் மீது வழக்கு தொடர்ந்தார். சுமார் ஐந்து ஆண்டுகள் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்த பொழுது நானும், என் மகனும் மிகப் பெரிய மன உளைச்சலுக்கு ஆளானோம் என்று எமோஷனலாக கூறினார் தியாகராஜன்.
தனது மகன் நன்றாக வாழவேண்டும், ஒரு நல்ல மருமகளை தேடும் அந்த விஷயத்தில் தான் தோற்றுப்போனதாக அவர் அப்போது வருத்தப்பட்டார்.
ஒரு பாடலை எடுக்க மட்டும் 3 மாதம்.. 5 வருடத்தில் படமாக்கப்பட ஒரே தமிழ் படம் எது தெரியுமா?