Asianet News TamilAsianet News Tamil

ஒரு பாடலை எடுக்க மட்டும் 3 மாதம்.. 5 வருடத்தில் படமாக்கப்பட ஒரே தமிழ் படம் எது தெரியுமா?

Classic Tamil Film : சுமார் 76 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மொழியில் எடுக்கப்பட்ட பிரம்மாண்டமான படம் ஒன்று, இன்றும் காலம் கடந்து பலரால் பேசப்படுகிறது.

Classic Tamil movie chandralekha took 5 years to complete ans
Author
First Published Aug 16, 2024, 11:33 PM IST | Last Updated Aug 16, 2024, 11:40 PM IST

வசனங்கள் ஏதும் இல்லாமல் முதல் முதலில் தமிழ் திரை உலகில் எடுக்கப்பட்ட திரைப்படம், கடந்த 1918ம் ஆண்டு வெளியான "கீச்சக்க வதனம்" என்பது தான். அதன் பிறகு சுமார் 13 ஆண்டுகள் கழித்து ரெட்டி இயக்கத்தில் வெளியான "காளிதாஸ்" என்கின்ற திரைப்படம் தான் தமிழ் திரையுலகில் வெளியான முதல் பேசும் திரைப்படமாகும். 

ஆனால் கடந்த 1948ம் ஆண்டு, அதாவது சுமார் 76 ஆண்டுகளுக்கு முன்பாகவே சுமார் 30 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் ஒரு மாபெரும் திரைப்படம் இயக்கப்பட்டது. அது தான் சந்திரலேகா, இயக்குனர் எஸ் எஸ் வாசன் தானே தயாரித்து இயக்கிய திரைப்படம் அது. இந்த திரைப்படத்தில் எடுக்கப்பட்ட பல பிரம்மாண்டமான விஷயங்கள் 76 ஆண்டுகள் கழித்து இப்போதும் கூட எடுக்கப்பட முடியாமல் உள்ளது என்றால் அது மிகையல்ல. 

கஷ்டத்தில் துவங்கி.. சேவையில் முடிந்த வாழ்க்கை - இறப்பிலும் கோடிகளை நன்கொடையாக கொடுத்த தமிழ் நடிகை!

குறிப்பாக சந்திரலேகா திரைப்படம் என்றாலே அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது அந்த "முரசாட்டம்" தான். பாடல்கள் அல்லாமல் நடனங்கள் மட்டும் அமையப் பெற்றிருக்கும் ஒரு பாடல் அது. அண்மையில் அந்த திரைப்படத்தில் பணியாற்றிய மூதாட்டி ஒருவர் அளித்த பேட்டியில், அந்த பாடல் மட்டும் சுமார் மூன்று மாத காலம் எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார். பல்வேறு நடன கலைஞர்கள் இணைந்து அந்த பாடலை உருவாக்கியதாகவும் அவர் பெருமையோடு கூறினார். 

ஜெமினி ஸ்டுடியோஸ் நிறுவனம் கடந்த 1940ம் ஆண்டு இந்த திரைப்படத்திற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டது. சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து 1943ம் ஆண்டு இந்த திரைப்படம் உருவாக தொடங்கியது. சவாலான பல தொழில்நுட்ப விஷயங்களை இந்த திரைப்படத்தில் புகுத்தி சுமார் ஐந்து ஆண்டுகள் இரவு பகலாக உழைத்து, 1948ம் ஆண்டு இந்த திரைப்படம் தமிழ் மொழியில் வெளியானது. 

சுமார் 207 நிமிடங்கள் (3.45 மணிநேரம்) ஓடும் இந்த திரைப்படம் தமிழ் மொழியில் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லையாம். ஆனால் அதன் பிறகு மீண்டும் இந்த திரைப்படம் ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிட்ட பொழுது மிகப்பெரிய வசூலை அள்ளியதாக கூறப்படுகிறது. தமிழிலும் ஹிந்தியில் சேர்த்து 1948ம் ஆண்டு இறுதியில் இந்த திரைப்படம் சுமார் 20 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Aadudam Andhra: ஆடுதாம் ஆந்திரா; ஊழல் புகாரில் சிக்கும் நடிகை ரோஜா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios