கஷ்டத்தில் துவங்கி.. சேவையில் முடிந்த வாழ்க்கை - இறப்பிலும் கோடிகளை நன்கொடையாக கொடுத்த தமிழ் நடிகை!
Kollywood Actress : தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகிலேயே சூப்பர் ஹிட் நடிகையாக வலம்வந்த ஒருவர், அவர் இறக்கும் தருவாயில் கோடிக்கணக்கான சொத்துக்களை அள்ளிக்கொடுத்துள்ளர்.
Srividya
கடந்த 1953ம் ஆண்டு ஜூலை மாதம் 24ம் தேதி பிரபல காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்திக்கும், பிரபல பாடகி வசந்தா குமாரிக்கும் பிறந்த மகள் தான் ஸ்ரீவித்யா. இளம் வயதிலேயே தந்தைக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக அவர் உழைக்க முடியாமல் போக, குடும்ப பாரத்தை தனது 14வது வயதில் சுமக்க தொடங்கினார் ஸ்ரீவித்யா. அழகிய தோற்றமும், குயில் போன்ற குரலும், மயில் போன்ற நடனமும் ஸ்ரீதிவ்யாவை வெகு சீக்கிரத்தில் மிகப்பெரிய நாயகியாக மாற்றியது.
எனக்கு சுயமரியாதை இருக்கிறது! அம்பானி வீட்டு திருமணம... ரகசியத்தை உடைத்த அனுராக் காஷ்யாப் மகள்!
Kamalhaasan
கடந்த 1967ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான "திருவருட்செல்வர்" என்கின்ற திரைப்படத்தில் தான் தனது 14வது வயதில் நடிகையாக அவர் அறிமுகமானார். தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என்று பல மொழிகளில் எண்ணற்ற திரைப்படங்களில் நடித்து மெகா ஹிட் நடிகையாக மாறிய இவருக்கு, உலக நாயகன் கமல்ஹாசன் மீது காதல் மலர்ந்தது. இருவரும் ஜோடி புறாக்களாக சில ஆண்டுகள் காதல் வானில் பறந்தனர்.
Srividya husband
ஆனால் ஒரு கட்டத்தில் ஸ்ரீவித்யாவின் தாயார், கமலுடனான அவரது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஜார்ஜ் தாமஸ் என்பவரோடு அவருக்கு கடந்த 1978ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் வெகு சில ஆண்டுகளில், ஸ்ரீவித்யா அத்தனை ஆண்டு காலம் சேமித்து வைத்த அனைத்து சொத்துக்களையும் அவருக்கு தெரியாமலேயே ஜார்ஜ் தாமஸ் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் இருவர் இடையே விரிசல் ஏற்பட்டது, திருமணமான இரண்டு ஆண்டுகளில் அவர்கள் விவாகரத்தும் பெற்றனர்.
Actress Srividya
இந்த சூழ்நிலையில் தான் திரை உலகில் தனது இரண்டாவது இன்னிங்ஸை அட தொடங்கினார் ஸ்ரீவித்யா. 1980ம் ஆண்டு தொடங்கி, 2005ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக மீண்டும் அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கினார். ரஜினிகாந்த், கமலஹாசன் போன்ற நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்த அதே ஸ்ரீவித்யா, அவர்கள் இருவருக்கும் மாமியார் வேடத்திலும் நடித்த அசத்தியிருந்தார். ஆனால் நாள்கள் செல்ல செல்லத்தான் ஸ்ரீவித்யா தன் உடல் நிலையும் குன்றி வருவதை கவனித்தார்.
Kollywood Actress Srividya
ஒரு கட்டத்தில் தனக்கு புற்றுநோய் முற்றிவிட்டது என்பதை புரிந்துகொண்ட ஸ்ரீவித்யா, இசை பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு தன்னிடம் இருந்த கோடிக்கணக்கான சொத்துக்களை அவர்களுடைய கல்விக்காக எழுதி வைப்பதாக அறிவித்தார். தன்னுடைய இறுதி காலத்தை கேரளாவில் கழித்த ஸ்ரீவித்யா, கடந்த 2006ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி தனது 53 வது வயதில் காலமானார். அவருடைய இறுதி நிமிடங்களில் தனது அன்பு காதலர் கமலோடு சில நிமிடம் அவர் உரையாடியதாகவும் கூறப்படுகிறது.
16 ஆண்டுகள் தவத்திற்கு கிடைத்த பரிசு – 9 தேசிய விருதுகளை குவித்த பிருத்விராஜின் மலையாள படம்!