செந்தில் பாலாஜிக்கு அதிர்ச்சி கொடுத்த ஆளுநர்.!! ஜாமீனில் வெளியே வருதில் உருவான புதிய சிக்கல்
போக்குவரத்து துறை ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர ஆளுநர் ஆர்.என். ரவி அனுமதி அளித்துள்ளார். செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், ஆளுநரின் இந்த அதிரடி நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது
அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் வசூலித்ததாக வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். கடந்த ஓராண்டாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜி பல முறை ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால் ஜாமின் மனுவை கீழமை நீதிமன்றம் முதல் உச்சநீதிம்ன்றம் வரை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து மீண்டும் ஜாமின் மனு கோரி தாக்கல் செய்த மனுவில் விரைவில் தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ஆளுநர் ரவி செக் வைத்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
திருவண்ணாமலை மாவட்ட ஆரணியை சேர்ந்த பாலாஜி சார்பில் வழக்கறிஞர் பாலாஜி ஸ்ரீனிவாசன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் ஊழல் வழக்குகளை ஒராண்டுக்குள் நிறைவு செய்ய உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்யப்படுள்ளது. மேலும் ஊழல் வழக்குகளின் விசாரணை நடைபெறுவதில் தமிழ்நாடு அரசு செய்து வரும் தாமதத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்
இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஒகா, ஏ.ஜி. மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு தொடரும் அனுமதி கோரி ஆளுநருக்குஅனுப்பி வைக்கப்பட்ட மனுக்களின் நகல்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டு வழக்கு விசாரணை செப்டம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தமிழகத்தில் 25 சுங்கச்சாவடி கட்டணம் உயர்ந்தது.! எவ்வளவு .?எந்த எந்த டோல்கேட் தெரியுமா.?
ஒப்புதல் கொடுத்த ஆளுநர்
நாளை வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு தொடர அனுமதி கோரி தமிழ்நாடு அரசுக்கு கடந்த 2023 செப்டம்பர் 22-ஆம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் கடிதம் எழுதினார். இதனையடுத்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு தொடர ஆளுநரிடம் அனுமதி சுற்றாணை குறிப்பு ஆளுநருக்கு கடந்த ஜனவரி 4-ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஜாமினில் வெளியே வர முடியுமா.?
ஆளுநர் மாளிகை கேட்ட கூடுதல் தகவல்களும் பிப்ரவரி மாதம் அனுப்பிவைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த முறை நடைபெற்ற வழக்கு விசாரணை நாளான ஆகஸ்ட் 23ஆம் தேதி இரவு ஆளுநர் மாளிகையில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்ற வழக்கு தொடர ஆளுநர் ஆர்,என். ரவி அனுமதி அளித்து கோப்புகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.