தமிழகத்தில் 25 சுங்கச்சாவடி கட்டணம் உயர்ந்தது.! எவ்வளவு .?எந்த எந்த டோல்கேட் தெரியுமா.?
தமிழகத்தில் 25 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கட்டணம் உயர்ந்துள்ளது. 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்தப்பட்டதால், வாகன ஓட்டிகள் ரூ.5 முதல் ரூ.150 வரை அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு
பொதுமக்களுக்கு ஷாக் அளிக்கும் மாதமாக செப்டம்பர் மாதம் தொடங்கியுள்ளது. சமையல் எரிவாயு விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு, ஆதார் அப்டேட் செய்ய கட்டணம் என பல்வேறு அறிவிப்பு பொதுமக்களை திக்குமுக்காட வைத்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு சாலைகள் தனியார் நிறுவனங்களுக்கு மத்திய நெடுஞ்சாலை துறையால் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. சாலையை உரிய முறையில் பராமரித்து சீரமடைத்து வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு பகுதியிலும் டோல்கேட் அமைத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆண்டுக்கு இரண்டு முறை மாற்றம்
சுங்கச்சாவடி கட்டணமானது ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை தேசிய நெடுஞ்சாலைத்துறையால் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன் படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதன்மையான சுங்கச்சாவடியிலும் செப்டம்பர் மாதம் மீதமுள்ள மற்ற சுங்கச்சாவடியிலும் கட்டணம் மாற்றப்படுகிறது. அந்த வகையில் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் சுங்கச்சாவடியில் கட்டண மாற்றம் அமல்படுத்தவில்லை.
Tomato : ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்.! கோயம்பேட்டில் கிடு, கிடுவென குறைந்த விலை- காரணம் என்ன.?
எந்த சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு
தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச் சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கட்டுப்பாட்டில் இந்த சுங்கச் சாவடிகள் செயல்படுகின்றன.
தேர்தல் முடிவடைந்த ஜூன் மாதத்தில் கட்டணம் உயர்ந்தப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் மீதமுள்ள சுங்கச்சாவடியான விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, ஓமலூர், சமயபுரம் உட்ப 25 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் (செப்டம்பர் 1-ம் தேதி) கட்டணம் உயர்ந்துள்ளது.
150 ரூபாய் வரை கட்டணம் உயர்வு
அதன்படி தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுஉள்ளது. இந்த உயர்வால் வாகன ஓட்டிகள் ரூ.5 முதல் ரூ.150 வரை அதிகமாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.