MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சூப்பர்ஸ்டாரின் லால் சலாம் உடன் ஒத்தைக்கு ஒத்தையாக மோதிய மணிகண்டனின் லவ்வர் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்

சூப்பர்ஸ்டாரின் லால் சலாம் உடன் ஒத்தைக்கு ஒத்தையாக மோதிய மணிகண்டனின் லவ்வர் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்

ரஜினிகாந்தின் லால் சலாம் படத்துக்கு போட்டியாக நேற்று ரிலீஸ் ஆன மணிகண்டனின் லவ்வர் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 10 2024, 10:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Lal salaam, Lover

Lal salaam, Lover

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவர் தான் மணிகண்டன். தரமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் கில்லாடியானவர். இவர் நடிப்பில், கடந்த ஆண்டு வெளிவந்த குட் நைட் திரைப்படம் வேறலெவல் ஹிட் ஆனது. குறட்டை விடுவதால் குடும்பத்தில் என்னென்ன பிரச்சனைகள் வருகிறது என்பதை யதார்த்தமாக சொல்லி இருந்த இப்படம் மிகப்பெரிய வெற்றியையும் ருசித்து இருந்தது.

24
Lover vs Lal salaam

Lover vs Lal salaam

குட் நைட் படத்தில் ஹீரோவாக கலக்கிய மணிகண்டன் அடுத்ததாக மத்தகம் என்கிற வெப் தொடரில் வில்லனாக நடித்து அசத்தினார். கிட்டத்தட்ட கோலிவுட்டில் அடுத்த விஜய் சேதுபதியாகவே வலம் வருகிறார் மணிகண்டன். ஹீரோவோ, வில்லனோ எந்த கேரக்டராக இருந்தாலும் அதை திறம்பட செய்து வரும் இவர் நடிப்பில் தற்போது திரைக்கு வந்துள்ள திரைப்படம் தான் லவ்வர். குட் நைட் படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் தான் லவ்வர் படத்தையும் தயாரித்து உள்ளது.

இதையும் படியுங்கள்... ரஜினி நடிச்சும் இந்த நிலைமையா? பாக்ஸ் ஆபிஸில் பயங்கர அடி வாங்கிய லால் சலாம் - முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?

34
Lover movie Box office

Lover movie Box office

ரொமாண்டிக் கதையம்சம் கொண்ட இப்படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக ஸ்ரீகெளரி பிரியா நடித்துள்ளார். இப்படத்தை பிரபுராம் வியாஸ் என்பவர் இயக்கி இருக்கிறார். குட் நைட் படத்துக்கு இசையமைத்த ஷான் ரோல்டன் தான் லவ்வர் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இப்படம் பிப்ரவரி 9-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. அதுவும் சூப்பர்ஸ்டார் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் படத்துக்கு போட்டியாக லவ்வர் படம் வெளிவந்துள்ளது.

44
Lover movie collection

Lover movie collection

சூப்பர்ஸ்டார் படம் ரிலீஸ் ஆனால் பிற படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காது என்கிற பயத்தில் பெரும்பாலும் சின்ன பட்ஜெட் படங்களை அதனுடன் ரிலீஸ் செய்ய மாட்டார்கள். ஆனால் கண்டெண்ட் நன்றாக இருந்தால் யார் படத்துடனும் மல்லுக்கட்டலாம் என்கிற நம்பிக்கையில் வெளியிடப்பட்ட படம் தான் லவ்வர். இப்படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் முதல் நாளே ரூ.1 கோடி வசூலை வாரிக்குவித்து உள்ளது. அடுத்த இரு தினங்களும் விடுமுறை நாட்கள் என்பதால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... வலிமை முதல் லியோ வரை; எத்தனை கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என சாய் பல்லவி ரிஜெக்ட் பண்ணிய படங்கள் இத்தனையா

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved