Actress Roshni : மாடர்ன் டிரஸ்.. அசத்தும் போஸ்.. கண்களால் கைது செய்யும் ரோஷ்ணி ஹரிப்ரியன் - லேட்டஸ்ட் பிக்ஸ்!
Actress Roshni Haripriyan : சென்னையில் கடந்த 1990ம் ஆண்டு பிறந்து, இன்று சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் நல்ல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ரோஷ்ணி ஹரிப்ரியன், அவருக்கு வயது 33.
Actress Roshni
சென்னையில் பிறந்து, பிரபல எத்திராஜ் கல்லூரியில் "ஹியூமன் பயாலஜி" பட்டம் பெற்ற நடிகை ரோஷ்ணி ஹரிப்ரியன், கடந்த 2019ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய "பாரதி கண்ணம்மா" என்கின்ற சீரியல் மூலம் தான் அறிமுகமானார்.
Roshni Haripriyan
2019 மற்றும் 2020 ஆகிய இரு வருடங்கள், பிரபல டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் வெளியிட்ட "Most Desirable Women on Indian Television" என்ற பட்டியலில் டாப் 20 இடங்களில் இவர் இடம் பெற்றுள்ளார்.
Actress Roshni Haripriyan
கடந்த 2022ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான "குக் வித் கோமாளி" நிகழ்ச்சி, இவருடைய புகழை இன்னும் அதிக அளவில் மக்களுக்கு வெளிப்படுத்தியது என்று கூறினால் அது நிச்சயம் மிகையல்ல.
Garudan movie actress
தொடர்ச்சியாக சின்னத்திரையில் பயணித்து வந்த ரோஷ்ணி ஹரிப்ரியன் இந்த ஆண்டு சூரியன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டான "கருடன்" திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.