- Home
- Gallery
- செம்ம கியூட்! பிறந்து ஒரு மாதம் கூட ஆகாத இரண்டாவது குழந்தையின் போட்டோ ஷூட்டை வெளியிட்ட ஸ்ரீதேவி அசோக்!
செம்ம கியூட்! பிறந்து ஒரு மாதம் கூட ஆகாத இரண்டாவது குழந்தையின் போட்டோ ஷூட்டை வெளியிட்ட ஸ்ரீதேவி அசோக்!
சின்னத்திரை சீரியல் நடிகை, ஸ்ரீதேவி அசோக்... கடந்த மாதம் பிறந்த தன்னுடைய இரண்டாவது குழந்தையின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் தற்போது வைரலாகி வருகிறது.

தனுஷ் நடிப்பில் வெளியான புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தின் மூலமாக, வெள்ளித்திரையில் அறிமுகமாகி, ஒரு சில படங்களில் நடித்த போதும், சரியான பட வாய்ப்பு அமையாததால் அதிரடியாக சின்னத்திரை பக்கம் சாய்ந்தவர் தான் ஸ்ரீதேவி அசோக்.
சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'செல்லமடி நீ எனக்கு' சீரியல் மூலம் தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கிய ஸ்ரீதேவி... இதை தொடர்ந்து, அடுத்தடுத்து பல சீரியல்களில் நடித்தார்.
Ramya Pandian: தகதகவென மின்னும் பட்டு சேலையில்... தங்க சிலை போல் இருக்கும் ரம்யா பாண்டியன்!
கடந்த 17 வருடங்களாக சன், கலைஞர், ஜெமினி, ஸ்டார் விஜய் மற்றும் ஜீ தமிழ் போன்ற பல முன்னணி சேனல்களில் ஒளிபரப்பான 20க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார் ஸ்ரீதேவி அசோக்.
குறிப்பாக 'தங்கம்', 'இளவரசி', 'கல்யாண பரிசு', 'நிலா' போன்ற சீரியல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதே போல் ஜீ தமிழில், செம்பருத்தி, விஜய் டிவியில்... 'ராஜா ராணி', 'அரண்மனைக்கிளி',போன்ற சீரியல்களில் நடித்தார்.
தற்போது பொன்னி சீரியலில் நடித்து வருகிறார். ஸ்ரீதேவி அசோக் கடந்த 2018 ஆம் ஆண்டு அசோக் சிண்டெலா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த ஜோடிக்கு சித்தாரா என்கிற ஐந்து வயது மகள் ஒருவர் உள்ளார்.
இதை தொடர்ந்து இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்த ஸ்ரீதேவிக்கு... கடந்த மாதம், இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. தன்னுடைய இரண்டாவது குழந்தை குறித்து மிகவும் எமோஷ்னல் பதிவு ஒன்றையும் ஸ்ரீதேவி போட்டிருந்தார்.
அடிக்கடி தன்னுடைய இரண்டாவது குழந்தையுடன் எடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வந்த ஸ்ரீதேவி தற்போது... இரண்டாவது குழந்தையின் போட்டோ ஷூட் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.