Asianet News TamilAsianet News Tamil

தமிழ்நாடு என்றைக்குமே திராவிடக் கோட்டை... பொறுத்திருந்து பாருங்க...: மு.க.ஸ்டாலின் சூளுரை

தமிழ்நாடு என்றைக்குமே திராவிடக் கோட்டை என்று தமிழ்நாட்டு மக்கள் உணர்த்தி உள்ளார்கள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Tamil Nadu is forever a Dravidian fortress... wait and see...: MK Stalin slams minority BJP alliance
Author
First Published Jun 15, 2024, 11:14 PM IST

நாற்பதுக்கு நாற்பது தீர்ப்பின் வழியாக தமிழ்நாடு என்றைக்குமே திராவிடக் கோட்டை என்று தமிழ்நாட்டு மக்கள் உணர்த்தி உள்ளார்கள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கும் அவர் நன்றி செலுத்தியுள்ளார்.

கோவையில் இன்று திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மும்பெரும் விழா நடைபெற்றது. காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் இந்த விழாவில் பங்கேற்றுப் பேசினர்.

இந்த விழாவுக்குப் பின் ட்விட்டரில் பதிவு ஒன்றை எழுதியுள்ள முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

"அது எங்க கோட்டை, இது எங்க கோட்டை என்று கனவுக்கோட்டை கட்டியவர்களுக்குத் "தமிழ்நாடு என்றைக்குமே திராவிடக் கோட்டை" என்று நாற்பதுக்கு நாற்பது தீர்ப்பின் வழியாகத் தமிழ்நாட்டு மக்கள் உணர்த்தியுள்ளார்கள்! நன்றி!

40 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்குச் சென்று என்ன செய்யப்போகிறார்கள் என்று கேட்பவர்களுக்கு…

மெஜாரிட்டி பா.ஜ.க. இருக்கும்போதே நாடாளுமன்றத்துக்குள் முழங்கியவர்கள் மைனாரிட்டி பா.ஜ.க.விடமா அடங்கிப் போவார்கள்!"

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தனது பதிவில் கூறியிருக்கிறார். முன்னதாக, விழாவில் பேசிய அவர், "கடந்த முறை இங்கே நடந்த கூட்டம் இந்தியா முழுவதும் ‘டிரெண்ட்’ ஆனது. அதற்குக் காரணம், பிரதமர் மோடி எட்டு முறை தமிழ்நாட்டிற்கு வந்து கட்டமைத்த பிம்பத்தை, ராகுல் காந்தி ஒரு ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து க்ளோஸ் செய்துவிட்டார். அன்று ராகுல் காந்தி வழங்கிய இனிப்பு, கருத்துக்கணிப்புகளைத் தகர்த்துவிட்டது" எனவும் அவர் தெரிவித்தார்.

"40 க்கு 40 வெற்றி திராவிட மாடல் அரசின் மீது மக்களுக்கு இருக்கும் திருப்திக்குக் கிடைத்த வெற்றி. ஆனால் அதைப் பற்றி யாரும் பேசமாட்டார்கள்" என்று தெரிவித்தார். 2026 சட்டமன்றத் தேர்தல் பற்றி பேசிய முதல்வர் ஸ்டாலின், கடந்த முறை அதிமுக வென்ற இடங்களிலும் திமுக வெற்றி பெறும் எனவும் திமுக கூட்டணி 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும் எனவும் திட்டவட்டமாகக் கூறினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios