MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சிம்பு - நயன்தாரா முதல்.. பப்லு - ஷீத்தல் வரை உருகி உருகி லவ் பண்ணிட்டு.. மின்னல் வேகத்தில் பிரிந்த 8 ஜோடிகள்!

சிம்பு - நயன்தாரா முதல்.. பப்லு - ஷீத்தல் வரை உருகி உருகி லவ் பண்ணிட்டு.. மின்னல் வேகத்தில் பிரிந்த 8 ஜோடிகள்!

உருகி உருகி காதலித்துவிட்டு சில பிரபலங்கள்... ச்சீ... ச்சீ... இந்த பழம் புளிக்கும் என்பது போல் மிகவும் வேகமாக பிரிந்து விடுவார்கள். அப்படி பட்ட 8 பிரபலங்கள் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். 

2 Min read
Author : manimegalai a
Published : Dec 19 2023, 09:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
சிம்பு நயன்தாரா:

சிம்பு - நயன்தாரா:

திரை பிரபலங்களின் லவ் பிரேக்-அப் என்கிற வார்த்தையை கேட்டதுமே பலருக்கும் முதலில் நினைவுக்கு வரும் ஹீரோ சிம்பு தான். இவர் 'வல்லவன்' படத்தில் நடிக்கும் போது... நடிகை நயன்தாராவை காதலித்த நிலையில், இந்த காதல் சில மாதங்களிலேயே முறிந்தது. எனினும் இந்த ஜோடி தற்போது வரை நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.
 

28
சிம்பு - ஹன்சிகா:

சிம்பு - ஹன்சிகா:

அதே போல் சிம்பு, நடிகை ஹன்சிகாவை 'வாலு' படத்தில் நடிக்கும் போது காதலித்தார். பார்ட்டி... டேட்டிங்... என ஜாலியாக இருந்த இந்த ஜோடியின் லவ், ஷூட்டிங் முடிவுக்கு வருவதற்கு முன்பே முறிந்து விட்டது. ஹன்சிகா கடந்த ஆண்டு தன்னுடைய காதலர் சோஹைல் கத்தூரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதே போல் தற்போது வரை சிம்புவுடன் நல்ல தோழியாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Top 5 Actors: நவம்பர் 2023 அதிகம் ரசிக்கப்பட்ட டாப் 5 சீரியல் பிரபலங்கள் யார் யார் தெரியுமா! Ormax பட்டியல்!

38
ஜெய் - அஞ்சலி:

ஜெய் - அஞ்சலி:

சில படங்களில் நடிக்கும் பிரபலங்கள்... தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் போது அவர்களுக்குள் காதல் வந்து விடுகிறது. அப்படி தான் 'எங்கேயும் எப்போதும்', 'பலூன்' போன்ற படங்களில் நடித்த போது, அஞ்சலி - ஜெய் இருவரும் காதலித்தனர். லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்ததாகவும் கூறப்பட்ட நிலையில்... இந்த காதல் பிரேக்கப்பில் முடிந்தது.

48
அனிருத் - ஆண்ட்ரியா:

அனிருத் - ஆண்ட்ரியா:

நடிகை ஆண்ட்ரியா தன்னை விட வயதில் குறைவான... இசையமைப்பாளர் அனிருத்தை காதலித்தார். ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையே பல முரண்பாடுகள் இருந்ததால்... காதலித்த வேகத்திலேயே இவர்களின் லவ் பிரேக்கப்பில் முடிந்தது.

Baahubali: 'பாகுபலி' படத்தில் பிரபாஸ் மற்றும் ராணா வேடத்திற்கு.. ராஜமௌலியின் ஃபஸ்ட் சாய்ஸ் யார் யார் தெரியுமா?
 

58
ஆர்.கே.சுரேஷ் - திவ்யா கணேசன்:

ஆர்.கே.சுரேஷ் - திவ்யா கணேசன்:

தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் சீரியல் நடிகை திவ்யா கணேசனை திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவித்தார். ஆனால் இதை அறிவித்த சில மாதங்களிலேயே ஆர்.கே.சுரேஷ் மற்றும் திவ்யா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நிச்சயதார்த்தத்திற்கு பின்னர் இந்த திருமணம் நிறுத்தப்பட்டது.

68
சமந்தா - சித்தார்த்:

சமந்தா - சித்தார்த்:

நடிகை சமந்தா மற்றும் சித்தார்த் இருவரும், தெலுங்கில் கடந்த 2013 ஆம் ஆண்டு Jabardasth என்கிற படத்தில் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் தீ கொளுந்து விட்டு எரித்ததாக கூறப்பட்டது. பின்னர் ஒரு சோப்பு விளம்பரத்திலும் இருவரும் இணைந்து நடித்தனர். பின்னர் ஒரே வருடத்தில் இவர்கள் இருவரும் பிரேக் அப் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. சில சமயங்களில் சமந்தா சித்தார்த்தை மறைமுகமாக விமர்சிக்கும் விதத்தில் பதிவு போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Malavika Mohanan: கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்... சிவப்பு உடையில் கடற்கன்னி போல் அமர்ந்து... மாலு வெளியிட்ட போட்டோஸ்!

78
கவின் - லாஸ்லியா:

கவின் - லாஸ்லியா:

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவின் - லாஸ்லியா இருவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போது உருகி உருகி காதலித்த நிலையில், வெளியே வந்ததும் ஒருவரை ஒருவர் தெரியாதது போல் நடந்து கொண்டனர். மொத்தத்தில் இருந்த காதல் மின்னல் வேகத்தில் முடிவுக்கு வந்தது.

88
பப்லு - ஷீத்தல்:

பப்லு - ஷீத்தல்:

தன்னை விட சுமார் 23 வயது சிறியவராக ஷீத்தலை, காதலித்து கடந்த செப்டம்பர் மாதல் திருமணமும் செய்து கொண்டார் பப்லு. லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் போது இனித்த காதல்... திருமணத்திற்கு பின்னர் கடந்து போய் சில மாதத்திலேயே முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
நயன்தாரா
சிலம்பரசன்
ஹன்சிகா மோத்வானி
அனிருத் ரவிச்சந்தர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved