MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Baahubali: 'பாகுபலி' படத்தில் பிரபாஸ் மற்றும் ராணா வேடத்திற்கு.. ராஜமௌலியின் ஃபஸ்ட் சாய்ஸ் யார் யார் தெரியுமா?

Baahubali: 'பாகுபலி' படத்தில் பிரபாஸ் மற்றும் ராணா வேடத்திற்கு.. ராஜமௌலியின் ஃபஸ்ட் சாய்ஸ் யார் யார் தெரியுமா?

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான, 'பாகுபலி' படத்தில் பிரபாஸ் மற்றும் ராணா கதாபாத்திரத்தில் நடிக்க, ராஜமௌலி முதலில் தேர்வு செய்த இரண்டு பிரபலங்கள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Dec 20 2023, 02:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

இந்திய சினிமாவில், பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் எடுத்தவர்கள் ஒரு சிலரே. அதில் முக்கியமானவர் இயக்குனர் ராஜமௌலி. இவர் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான 'பாகுபலி' திரைப்படம் 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.
 

27

இந்த படத்தில் மகிழ்மதியின் அரசன் அமரேந்திர பாகுபலியாக 'பிரபாஸ்' இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். வில்லனாக பல்வாள்தேவன் தேவன் என்கிற கதாபாத்திரத்தில் ராணா டகுபதி நடித்திருந்தார். மேலும் அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணா, சத்யராஜ், நாசர், தமன்னா உள்ளிட்ட பலர் முக்கிய இடத்தில் நடித்திருந்தனர்.

37

ஒரு அரசன் அரசனாக மட்டுமில்லாமல், மக்களின் நண்பனாகவும், ஒரு தலைவனாகவும் இருக்க வேண்டும் என இந்த படத்தின் மூலம் காட்டியிருந்தார் ராஜமௌலி. அதே போல் இக்கால இளம் ரசிகர்களையும் கவரும் விதத்தில் எடுக்கப்பட்டிருந்தது இப்படம். 'பாகுபலி' தி பிகினிங் என்கிற பெயரில் முதல் பாகம் 2015 ஆம் ஆண்டு வெளியான நிலையில், இரண்டாம் பாகம் 2017 ஆம் ஆண்டு 'பாகுபலி 2 தி கன்குலேஷன்' என்ற பெயரில் வெளியாகி தாறு மாறு வெற்றி பெற்றது.
 

47

இந்த படத்திற்கு பின்னர் இப்படத்தில் நடித்த அனைத்து பிரபலங்களும் உலக அளவில் பிரபலமாகினர். அதே போல் நடிகர் பிரபாஸும் பிக் பட்ஜெட் நாயகனாக மாறினார். தன்னுடைய சம்பளத்தையும் எக்கச்சக்கமாக உயர்த்தியதாக கூறப்படுகிறது.  படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்களை தொடர்ந்து, கீரவாணியின்  இசையும் அதிகம் பேசப்பட்டது. மேலும் 'பாகுபலி' திரைப்படம் தேசிய விருது உட்பட  பல விருதுகளை தன்வசமாக்கியது. 

Cool Suresh Meet Santhanam: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும்... சந்தானத்தை சந்தித்த கூல் சுரேஷ்!
 

57

'பாகுபலி' படத்தை பார்த்த அனைவருமே... பிரபாஸ் மற்றும் ராணா கதாபாத்திரத்தில் மற்ற எந்த நடிகரையும் நினைத்து கூட பார்க்கமுடியவில்லை என தெரிவித்திருந்தனர். அந்த அளவுக்கு திரையை தாண்டி பாகுபலியாக ரசிகர்கள் மனதை கவர்ந்தார் பிரபாஸ்.
 

67

ஆனால், இயக்குனர் ராஜமௌலியின் முதல் தேர்வு இவர்கள் இல்லை என்பது தான் அதிர்ச்சி தகவல். ராஜமௌலி பாகுபலி கதாபாத்திரத்தில் ரித்திக் ரோஷனை நடிக்க வைக்க முயன்றார். அதே போல் ராணா கதாபாத்திரத்தில் ஜான் ஆபிரகாமை நடிக்க வைக்க தீர்மானித்தார். ரித்திக் ரோஷனை சந்தித்து கதை கூற பல முறை முயன்றும் அவரால் முடியாமல் போனது. அதே போல், ஜான் ஆபிரகாம் ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.

Top 5 Actors: நவம்பர் 2023 அதிகம் ரசிக்கப்பட்ட டாப் 5 சீரியல் பிரபலங்கள் யார் யார் தெரியுமா! Ormax பட்டியல்!
 

77

இவர்கள் இருவரின் கால்ஷீட் கிடைக்காமல் போகவே தான், பின்னர் பிரபாஸ் மற்றும் ராணாவிடம் இந்த கதையை கூறியுள்ளார். இருவருக்கும் கதை மிகவும் பிடித்து போகவே, சுமார் 2 வருடங்கள் வேறு எந்த ஒரு படத்திலும் நடிக்காமல், பாகுபலி படத்தில் இவர்கள் நடித்து முடித்தனர். இந்த கார்த்திருப்பும் பொறுமையும் தான் இமாலைய வெற்றியை இவர்களுக்கு பெற்று தந்தது என்றால் அது மிகையல்ல.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
பிரபாஸ்
பிரபாஸ் திருமணம்
ராஜமௌலி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved