- Home
- Gallery
- Rambha : நடிகை ரம்பாவின் கணவர் ஏற்கனவே திருமணமானவரா? விவாகரத்து வரை சென்று மீண்டும் கணவருடன் சேர்ந்து எப்படி?
Rambha : நடிகை ரம்பாவின் கணவர் ஏற்கனவே திருமணமானவரா? விவாகரத்து வரை சென்று மீண்டும் கணவருடன் சேர்ந்து எப்படி?
நடிகை ரம்பாவின் கணவர் ஏற்கனவே திருமணமானவர் என்று தகவல் வெளியானது. ரம்பாவின் திருமண வாழ்க்கை விவாகரத்து வரை சென்ற பின்னர் அவர் எப்படி தனது கணவருடன் சேர்ந்தார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Actress Rambha
90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் நடிகைகளில் ரம்பாவும் ஒருவர். 90களின் பிற்பகுதியில் திரையுலகில் கொடிகட்டி பறந்தவர் ரம்பா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, ஹிந்தி, போஜ்புரி உள்ளிட்ட பல மொழிகளிலும் அவர் நடித்து பிரபலமானார்.
Actress Rambha
1993-ம் ஆண்டு தமிழில் உழவன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் ரம்பா. இந்த படத்தில் வரும் பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ பாடல் இன்று வரை பலரின் ஃபேவரைட் பாடலாக உள்ளது. எனினும் ரம்பா கதாநாயகியாக அறிமுகமானது சுந்தர் சி இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான உள்ளத்தை அள்ளத்தா படத்தில் தான்.
Actress Rambha
இதை தொடர்ந்து அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் செங்கோட்டை, சுந்தர புருஷன், நினைத்தேன் வந்தாய், காதலா காதலா, விஐபி, மின்சாரக் கண்ணா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.
Actress Rambha
அந்த காலக்கட்டத்தில் தொடையழகி என்றும் அழைக்கப்பட்ட ரம்பா திரையில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே ரஜினி, கமல், விஜய், அஜித், கார்த்திக், அர்ஜுன், பிரசாந்த் என பல முன்னணி நடிகர்களுடனும் நடித்தார். ஒருகட்டத்தில் கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு பிஸி நடிகையாக மாறினார் நடிகை ரம்பா.
Actress Rambha
இதனிடையே 2010-ம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதனை திருமணம் செய்ய முடிவு செய்தார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள், ஒரு மகன் என மொத்தம் 3 பிள்ளைகள் உள்ளனர்.
Actress Rambha family photos
திருமணமாகி சில ஆண்டுகளுக்கு பிறகு ரம்பாவின் கணவர் ஏற்கனவே திருமணமானவர் என்று ஒரு தகவல் வேகமாக பரவியது. இந்திரகுமார் பத்மநாதன் ஏற்கனவே துஷ்யந்தி செல்வவிநாயகம் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், அதை பற்றி தனக்கு எதுவும் தெரியாது ரம்பா கூறியிருந்தார்.
Actress Rambha
எனவே ரம்பா தனது விவாகரத்து செய்ய உள்ளதகாகவும் செய்திகள் வெளியாகின. இருவரும் சிறிது காலம் பிரிந்து வாழ்ந்தனர். மேலும் இதுதொடர்பான வழக்கு சென்னை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது தனக்கு மாதம் ரூ.2.5 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். ஆனால் ரம்பா உடன் சேர்ந்து வாழ கணவர் பத்மநாபன் விருப்பம் தெரிவிக்கவே இருவரும் சேர்ந்து வாழ தொடங்கினர். தற்போது சினிமா துறையில் இருந்து விலகி குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
Actress Rambha
வெள்ளித்திரையை போலவே சின்னத்திரையிலும் பல நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார். 2011 ஆம் ஆண்டில், பிலிம்ஸ்டார் என்ற மலையாளத் திரைப்படம் தான் ரம்பாவின் கடைசி படமாக அமைந்தது. தற்போது ரம்பா தனது குடும்பத்துடன் டொராண்டோவில் வசித்து வருகிறார். பொது பார்வையில் இருந்து விலகி இருந்தாலும், சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.